Thursday, August 28, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (1)

அத்தியாயம் 1

நான் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன். வாழ்க்கை நிலையற்றது. நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை. நான் போட்ட திட்டத்திற்கு சரியான பதிலடியாய் விழுந்தது அம்மாவின் தொலைபோசி அழைப்பு. நான் என்ன செய்வது. நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாய் அமைவது தானே இயல்பு.

இப்பிரச்சனைக்கு நான் மட்டும் காரணமாக இருந்துவிட்டால் பரவாயில்லை. நளினா என்றொருத்தி இருக்கிறாளே. அவளை சமாளிக்க வேண்டும். இல்லை என்றால் அம்மாவை சமாதானப் படுத்த வேண்டும். எப்படிப் பார்த்தாலும் நான் தப்பிப்பது சிரமம் தான். ஒரு பக்க அடி நிச்சயமாய் காத்திருக்கிறது.

நளினா, என் அழகிய இராட்சசி. சுருக்கமாகச் சொன்னால் என் அன்புக் காதலி. வேண்டாம் என்று சொன்னால் நளினாவின் மூக்குச் சிவந்துவிடும். சாதாரணமாகவே ‘லொட லொட’வென வாய்யடிப்பவள். சாதகமாக இல்லாத ஒரு விசயத்தைச் சொன்னால் என்னை வறுத்தெடுத்துவிடமாட்டாளா? கோபமாய் இருந்தாலும் நளினாவை ரசிப்பவன் நான்.

நேற்றிரவு நளினா ‘எஸ்.எம்.எஸ்’ செய்திருந்தாள். எப்பொழுதும் பேசும் சங்கதி தான். அவள் சலிக்காமல் கேட்கும் கேள்வி. நானும் சலிக்காமல் பதில் சொல்லும் கேள்வி.

“உன்னைப் பார்கனும் போல இருக்கு, மூனு வாரமா உன்னைப் பார்க்காம ரொம்ப ‘மிஸ்’ பன்றேன். உனக்கு என்ன பத்தின ஞாபகம் இருக்கா இல்லையா? என்னைக் கண்டுக்கவே மாட்டுறயே?”. பதிலளித்தேன். வழக்கம் போல் மீண்டும் மீண்டும் பல கேள்விகள். இராவணனின் தலை போல வளர்ந்துக் கொண்டிருந்தது. பாதி இராத்திரி கடந்துவிட்டது. ஒரு வேளை அவளுக்கு தூக்கம் வந்திருக்க வேண்டும்.

“ஓகேடா, நான் தூங்கப் போறேன், குட் நைட்”, என முடித்தாள். நல்ல வேலையாக எஸ்.எம்.எஸ் புயல் ஓய்ந்தது. இல்லையென்றால் அன்று சிவராத்திரியாகத் தான் முடிந்திருக்கும்.

நளினாவின் கேள்வியை மீண்டும் என்னை நான் கேட்டுக் கொள்கிறேன். “உனக்கு என் ஞாபகம் இருக்கா இல்லையா”. எனக்கு பதில் தெரியவில்லை. அவள் ஞாபகம் இல்லாமல் இல்லை. ஆனால் அவளது ஞாபகம் என்னைப் பெரிதாகப் பாதிப்பது இல்லை.

மூன்று வாரமாக வேலைப் பளு என்னை வாட்டிவிட்டது. வேலைகளுக்கிடையே நளினாவின் தெலைபேசி அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் குறைவில்லாமல் வந்துக் கொண்டிருக்கத்தான் செய்தது. 24 மணி நேரமும் நான் அவள் அருகில் இருந்தாலும் போதாது. சில சமயம் அவள் அன்புத் தொல்லைகள் சின்ன சின்னக் கோபங்களை ஏற்படுத்தும். அவள் குரலைக் கேட்டவுன் தண்ணீர் பட்ட நெருப்பாய் என் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

நளினாவை விட ஒரு படி மேல் இருப்பவர் என் அம்மா. கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு எனக்கு எப்போது விடுப்பு கிடைக்கும் என காத்திருப்பார். தொடர்ந்தாற் போல் நான்கு நாட்கள் பொதுவிடுமுறை என தெரிந்தால் போதும், ‘வீட்டுக்கு வாடா’ என புராணம் பாட ஆரம்பித்துவிடுவார். இந்த அன்பு தொல்லைகளுக்குக் காரணமாய் அமையும் தொலைபேசியை என் மனம் பல முறை கொச்சை வார்த்தைகளில் திட்டித் தீர்த்திருக்கின்றது.
விடுமுறைக்கு அம்மா போட்டிருந்த திட்டம் எனக்குப் பிடிக்கவில்லை. நான் என் பாட்டிக்கு செல்ல பேரன் தான். பள்ளிப் பருவங்களில் நான் ஓடி ஆடிய தோட்டபுரம். மீன் பிடிக்க கற்றுக் கொண்டதும், கண்ணி வைக்கக் கற்றுக் கொண்டதும் தோட்டபுரத்தில் தான். ஆனால் நன் இப்போது சிறுவன் இல்லை. பெரியவர்களின் வற்புறுத்தல்களை என் சுதந்திரத்துக்கு முட்டுக் கட்டையாகவே கருதுகிறேன். பாசம் எனும் வார்த்தை நம் எண்ணங்களை பலமாக பாதிக்கும் ஆயுதமாகவே தெரிகிறது.

எனக்குத் தோட்டபுரம் போகப் பிடிக்கவில்லை. கொசுக் கடியும், மாட்டுச் சானியின் வாடையும் எனக்கு நரகமென தெரிகிறது. சிறுபிள்ளையாக இருந்த போது என் மாமன் பிள்ளைகளோடு அந்த மாட்டு தொழுவத்தைச் சுற்றி ஓடி விளையாடி இருக்கிறேன். அப்போதெல்லாம் என் காலில் மிதிபடும் சானியை பெரிதாய் கருதியதில்லை. இரண்டு குவளை நீர் விட்டு அலம்பினால் அகன்றுவிடும் சமாசாரம் என நினைப்பேன். இப்போதெல்லாம் மாட்டுச் சானியும் கோமிய வாடையும் என்னை நா குமட்டச் செய்கிறது.

நம் உறவினர்கள் முன்னேறாமல் இன்னமும் இந்த மாட்டுத் தொழுவத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்களே என என் மனத்திற்குள் பொறிந்துக் கொள்வேன். என் வீட்டுப் பெரியவர்களுக்கு அப்படி இல்லை. தொழுவத்தில் இருக்கும் ஒவ்வொரு பசுவும் அவர்களுடை பிள்ளைகள். புல் வைக்கும் போதும், பால் கறக்கும் போதும் மறுமொழி பேசாத அந்த ஜீவன்களோடு இவர்கள் பேச மறப்பதில்லை.

நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விழுந்திருக்கிறது. என் அம்மாவை பற்றி சொல்லவா வேண்டும். இதைக் கண்டு கொண்டு வர சொல்கிறார். நீ வீட்டிற்கு வந்துவிட்டல் இருவரும் சேர்ந்து பாட்டி வீட்டிற்குக் கிளம்பிவிடலாம் என்கிறார். நான் போகாவிட்டால். கண்டிப்பாக அழ ஆரம்பித்துவிடுவார். என்ன செய்வது, குடும்பத்தில் ஒரே மகனாகப் பிறந்துவிட்டல் பெரியவர்களின் கண்கானிப்பு எப்படி அமையும் என்பது எனக்குதான் தெரியும்.

போன விடுமுறையும் இப்படிதான் ஒரு வழியாக அடம்பிடித்து என்னை வீட்டிற்கு வரவழைத்துவிட்டார்கள்.

“டேய் பாரி, உனக்கு அப்படி என்னடா தலை போற வேலை? கோமதி ‘ஆன்ட்டி’ மகன் கூட கோலாலம்பூரில் தானே வேலை செய்யுறான், அவனை பாரு ஒரு நாள் ‘லீவு’ கிடைச்சாலும் வீட்டுக்கு ஓடிவந்துடுறான். குடும்பத்து மேல அவனுக்கு இருக்கிற அக்கரைக் கூட உனக்கு இல்லையேடா. அதே வெளியூர் போகலாம் வாடான்னு சொன்னா போதும் முதல் ஆளா வந்து நிக்குற. கடைசி காலத்துல கஞ்சி ஊத்துவனு உன்ன நம்பி இருக்கேன் பாரு, என்ன சொல்லனும்”

கோமதி ‘ஆன்ட்டி’யின் மகன் என்ற சொல் என் காதுகளில் விழுந்ததும் எனக்கு கொஞ்சம் சுரனை வந்தது. அவன் வேறு யாரும் இல்லை. என் நண்பன் அரவிந்தன் தான். ‘பூவிருக்கும் இட்த்தில் தானே வண்டுக்கு வேலை’ என நினைத்துக் கொண்டேன்.

நான் அப்போதுதான் தூங்கி எழுந்திருந்தேன். காலையிலேயே அம்மா சுப்ரபாதத்தை ஆரம்பித்துவிட்டார். நான் என் காதுகளை செவிடாக்கிக் கொண்டேன். அம்மாவின் போதனைகளை கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டது. அவ்வப்போது சரி என்பதற்கு அறிகுறியாக தலையாட்டிக் கொண்டேன். என்ன கேள்விக்காக தலையாட்டினேன் என எனக்கேத் தெரியவில்லை. வீட்டிற்கு வருவதற்கு வேம்பாக கசக்கும் என் சுபாவம் அம்மாவிற்குப் பழகிபோய் இருக்க வேண்டும்

எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. போன வருடம் சீன பெருநாளின் சமயம் என் தாத்தாவின் முதலாம் ஆண்டு தவசமும் வந்தது. சீன பெருநாள் என்றாலே எப்படியும் ஒரு வாரம் விடுமுறையாவது கிடைத்துவிடும். தலைநகரின் நிலமையைச் சொல்லத் தேவை இல்லை. தொலைதூர பயண பேருந்து டிக்கட்டுகளின் விலை விண்ணை முட்டி நிற்கும். எல்லோரும் ஊரைக் காலி செய்து போனது போலத் தலைநகரம் வெறிச்சோடிவிடும்.

அச்சமயம் நான் ஊருக்குப் போகவில்லை. என் தாத்தாவின் தவசத்தில் கலந்துக் கொள்ளவில்லை. நளினா எனக்கு முக்கியமாகத் தெரிந்தாள். அந்த ஒரு வார விடுமுறையில் அவளோடு நான் போக இருந்த ‘கெந்திங் மலை’ பயணம் தான் நினைவில் நின்றது.

பெண்கள் பக்கத்தில் இருந்தால் ஆண்களுக்குப் புத்தி பேதலித்துவிடும் என சொல்வார்களே. அந்த பாதிப்பாகதான் இருக்குமோ? எனக்குத் தெரிந்து நிச்சயமாக இல்லை. இது நானே சுயமாக எடுத்த முடிவுதான். மற்றவர்கள் என்னைப் பைத்தியக்காரன் என நினைத்தாலும் பரவாயில்லை. எனக்கு நளினாவுடன் இருக்கும் பொழுதுகள் தான் முக்கியமாய் பட்டது. அவள் என் இனியவள்.

“உங்க பாட்டிக்கு வயசாயிடுச்சுடா. பார்க்கப் போகும் போதெல்லாம் உன்னை பற்றி பேசாத நேரமில்லை. அந்த வயசான மனுசி உன் மேல வச்சிருக்கும் பாசம் கூடவா உனக்கு புரியல. உன் மாமாவும் பண்ணை வேலைகளிலேயே இருந்திடுரதால, அவங்ளுக்கு வாழ்க்கைப் போர் அடிச்சி போகுது. சில சமயம் சொந்தமாகவே பினாத்த ஆரம்பிச்சிட்டாங்க”.

அம்மா எதற்காக சம்பந்தம் இல்லாத விசயங்களை பேசிக் கொண்டிருக்கிறார் என யோசித்தேன். இளஞ்சூட்டோடு இருக்கும் தேனீரை பருகியவாறு அம்மா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சட்டென மாமாவின் நினைவு வந்தது. அந்நினைவு நந்தினியின் நினைவை தூண்டியது. நந்தினி என் தாய் மாமனின் மூத்த பெண். அவளைப் பார்த்து 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

“பெரிய மாமா பொண்ணு என்ன பண்ணிக்கிட்டு இருக்கா மா?”

“டேய் பாரி, நான் என்ன பேசிகிட்டு இருக்கேன், நீ என்ன கேட்க்குற?”

எதற்காக அப்படிக் கேட்டேன்? எனக்கே தெரியவில்லை. என்னை அறியாமல் வந்துவிட்ட்து அந்தக் கேள்வி.

“நந்தினி நம்ம டவுன்ல உள்ள துணிக் கடையில் ‘கிராணி’ வேலைப் பார்த்து வரா, பினாங்குப் பக்கம் ஒரு பையனுக்கு பேசி நிச்சயம் பண்ணிருக்காங்க. அன்னிக்கு உங்க மாமாவ பார்த்த போது கூடிய சீக்கிரமா அவளுக்கு கல்யாணத்தை செஞ்சி வைக்கனும்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. என்ன முடிவு பண்ணி இருக்காங்கனு தெரியல…”

அம்மா பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த காய்கறி நறுக்கும் மேசை மேல் அமர்ந்து தேனீரை சுவைத்தபடி இருந்தேன். அம்மாவின் முகத்தை நோக்கினேன். அவர் முகத்தில் லேசான கோடுகள் முதுமையை வரைந்துக் கொண்டிருந்தன.

நந்தினிக்கு கல்யாண வேலைகளை ஆரம்பித்துவிட்டார்களா. நந்தினி இன்போது எப்படி இருப்பாள். கண்டிப்பாக முன்பை விட அழகாகதான் இருக்க வேண்டும். ‘பாலிஷ்’ போட்ட பளிங்கு முகம் அவளுக்கு. சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி அவள் அழகுக்கு அழகு சேர்க்கும். பள்ளிப் பருவங்களில் நான் அவள் ரசிகனாக இருந்தது நான் மட்டுமே அறிந்த விசயம். காலத்தின் ஓட்டம் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்துவிட்டிருந்தது.

தொடரும்...

21 Comments:

விஜய் ஆனந்த் said...

நல்ல ஆரம்பம்!!!!

குசும்பன் said...

நேற்றே கதைக்கு முன்னோட்டம் போட்டு விட்டதால் இங்கு எல்லா இண்டெர்நெட் செண்டர்களும் நிரம்பி வழிகின்றன்.பிளாக்கில் பணம் கொடுத்து இடம் பிடித்து இப்பொழுதுதான் ஓப்பன் செய்தேன் உங்கள் பக்கத்தை.

படித்தபின் மீண்டும் ஒருமுறை வருகிறேன்.

குசும்பன் said...

//நான் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன். //

ஜெகதீசன் கொண்டுவந்த அல்வாவை சாப்பிட்டீங்களா?

குசும்பன் said...

//‘லொட லொட’வென வாய்யடிப்பவள். //

அப்படி இல்லை என்றால்தான் இயல்புக்கு மாறாக ஏதோ பிரச்சினை என்று அர்த்தம்:))

இந்த கருத்தை சொன்னவர் கோவி.கண்ணன்
(பெண்கள் அவரை கும்மலாம்)

குசும்பன் said...

//கோபமாய் இருந்தாலும் நளினாவை ரசிப்பவன் நான்.//

வேற வழி:(( ஆப்பு அசைத்த குரங்கு கதை தெரியுமா?:))

பரிசல்காரன் said...

//குசும்பன் said...

நேற்றே கதைக்கு முன்னோட்டம் போட்டு விட்டதால் இங்கு எல்லா இண்டெர்நெட் செண்டர்களும் நிரம்பி வழிகின்றன்.பிளாக்கில் பணம் கொடுத்து இடம் பிடித்து இப்பொழுதுதான் ஓப்பன் செய்தேன் உங்கள் பக்கத்தை.

படித்தபின் மீண்டும் ஒருமுறை வருகிறேன்.//

குசும்பன் குசும்புக்கு ஒரு அளவே இல்லாமப் போச்சு!

ஒரு அடிஸ்கேல் குடுங்கப்பா அவருக்கு!

A N A N T H E N said...

கதை நல்லா வந்திருக்கு
எதார்த்தம்
பல வரிகள் கவிதையாய் வர்ணிக்கப் பட்டுள்ளன
நான் ரசித்தவற்றில் ஒன்று கீழே!

//அவர் முகத்தில் லேசான கோடுகள் முதுமையை வரைந்துக் கொண்டிருந்தன//

ஜெகதீசன் said...

நல்ல ஆரம்பம்!!!!
தொடருங்கள்!
வாழ்த்துக்கள்!!!

Thamira said...

கொஞ்சம் பெர்சா இருக்குது, தொடரும் வேற போட்டுக்கிறீங்கோ.. அப்பாலிக்கா வந்து பட்ச்சுட்டு பதில் போடுறேன். ரெண்டு நாளு நம்ப கடைக்கு லீவு உட்டுட்டு எல்லார் கடைகளுக்கும் போய் வரலாம்னு கிளம்பிருக்கேன்.. அதுனால கண்டிப்பா மீண்டும் வந்து பதில்போடுவேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@விஜய் ஆனந்த்

நன்றி

@குசும்பன்
1) ஓ... அப்படியா?
//நிரம்பி வழிகின்றன்//
வாலி வச்சி பிடிச்சிடுங்க. வேஸ்ட்டா போயிட போகுது,
2) இல்லைங்க... அவர் கொடுக்காமல் சாப்பிட்டாரு... வயிறு வலிக்க...
3) இப்படி ஒரு ஆராய்ச்சி பண்ணிருக்காரா கோவி அண்ணான். ஆச்சரியம்.
4) ஆமாங்க அந்தக் குரங்கு கதைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியலையே...

VIKNESHWARAN ADAKKALAM said...

@பரிசல்காரன்

வருகைக்கு நன்றி. விடுங்க மாட்டாமளா போயிடுவாரு. வச்சிக்குவோம் கச்சேரிய.

@ஆனந்தன்

நன்றி. நல்ல டேஸ்ட் உங்களுக்கு.

@ஜெகதீசன்

குசும்பனுக்கும் உங்களுக்கும் ஜென்ம பகையா. உங்கள ஊறுகா மாதிரி தொட்டுக்கிறாரே? நன்றி அண்ணாச்சி. மீண்டும் வருக.

@தாமிரா.

சரி. மொதுவா வந்து பொதுவா கும்முங்க.

Thamiz Priyan said...

நல்ல ஆரம்பம்!!!!
தொடருங்கள்!
வாழ்த்துக்கள்!!!

ஜோசப் பால்ராஜ் said...

ரொம்ப நல்ல கதைய ஆரம்பிச்சுருக்க விக்கி.
சற்றே நீளமான அத்தியாயமா இருக்கு, அடுத்த பாகத்துல கவனத்தில் வைச்சுக்க.
தொடர் கதை தொடர் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

//குசும்பன் said...
//கோபமாய் இருந்தாலும் நளினாவை ரசிப்பவன் நான்.//

வேற வழி:(( ஆப்பு அசைத்த குரங்கு கதை தெரியுமா?:))
///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!

குசும்பன் said...

//VIKNESHWARAN said...
@பரிசல்காரன்

வருகைக்கு நன்றி. விடுங்க மாட்டாமளா போயிடுவாரு. வச்சிக்குவோம் கச்சேரிய.
//

ஹி ஹி உங்கள மாதிரி பெரிய திமிங்கிலங்கள் (கதை, கவிதை, கட்டுரை) எழுதும் ஆட்கள்தான் மாட்டுவாங்க, நான் எல்லாம் சின்ன குட்டி மீன் உங்க வலையில் மாட்டமாட்டோம்:)))

கச்சேரியை பாப் அல்லது ராக்காக வைக்கவும்:))

குசும்பன் said...

VIKNESHWARAN said...
@ஜெகதீசன்

குசும்பனுக்கும் உங்களுக்கும் ஜென்ம பகையா. உங்கள ஊறுகா மாதிரி தொட்டுக்கிறாரே? நன்றி அண்ணாச்சி. மீண்டும் வருக.//

ஆமாங்க 2011 ல் முதல்வராக என்று ஒரு போலிங்கில் 10 ஓட்டு போட்டாரு, தலைப்பு சொல்லுங்க போட்டியில் ஒரு ஓட்டு கூட போடவில்லை, போட்டு இருந்தா புக்காவது கிடைச்சு இருக்கும்:))
அதான் காசு வெட்டி போட்டு உறவை முறிச்சுக்கிட்டோம்:)))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ் பிரியன்

மிக்க நன்றி. அடுத்தடுத்த தொடர்களையும் படித்து கருத்துச் சொல்லுங்கள்.

@ஜோசப் பால்ராஜ்

சரிங்க அண்ணே. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. மீண்டும் வருக.

@ஆயில்யன்

அண்ணாச்சி நீங்களுமா?

@குசும்பன்
1) குட்டி மீன் குட்டியாவே இருந்திடாதே... பெருசாகட்டும் வெட்டி கறி வச்சிடுவோம்.

2) ஓ அதுல நான் கூட உங்களுக்கு 7/8 ஓட்டு போட்டெங்க. அந்த புத்தகத்த பரிசல் எனக்கு அனுபுவதா சொன்னாரு.

நிஜமா நல்லவன் said...

//குசும்பன் said...
//கோபமாய் இருந்தாலும் நளினாவை ரசிப்பவன் நான்.//

வேற வழி:(( ஆப்பு அசைத்த குரங்கு கதை தெரியுமா?:))
///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!

வால்பையன் said...

இது ஒரு குடும்பத்தின் பாசத்திற்கும்,
ஒரு பெண்ணின் அன்பிற்கும் இடையில் சிக்கி கொள்ளும் விக்கியின்,
(இல்லே வேற பேர் சொன்னாங்களே, சரி நாயகனின்னு வச்சுக்குவோம்.)
போராட்டம் தான் இந்த தொடர்கதை போல தெரிகிறது.

நாயகனின் அத்தை பெண்ணிடம் அறியாத வயதில் செய்த குறும்புகள் பற்றி கதையில் வருமா?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ நிஜமா நல்லவன்

நன்றி.. மீண்டும் வருக.

@வால் பையன்

ஆம் இருக்கும் என நினைக்கிறேன்... வருகைக்கு நன்றி தலைவரே...

VG said...

~~கோபமாய் இருந்தாலும் நளினாவை ரசிப்பவன் நான்.~~

enna oru vaakiyam.. :) enaku piditha vari.. :)