Wednesday, August 27, 2008

ஒரு இளமைத் தொடரின் அறிமுகப் பதிவு


ஹாய்… எல்லோரும் சௌக்கியமா இருக்கிங்களா? நான் பாரிதாசன் பேசுறேன். நாளைக்கு வரப் போகும் தொடரில் நான் தான் ஹீரோ. உங்களுக்கு நான் ஸீரோவா இருக்கலாம். ஏன்னா நான் புது முகம் இல்லையா.

நான் மற்றவர்களிடம் பேசியதை விட என்னக்கு நானே பேசிக் கொண்டது தான் அதிகம். என்னுடைய இந்தப் பழக்கம் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அப்படிப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கும் அப்பழக்கம் இருக்கிறதென்று அர்த்தம்.

இந்தக் கதையை இல்லை… இல்லை… என் வாழ்க்கை சுயசரிதத்தை அல்லது அதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நான் தான் சொல்லப் போகிறேன். நான் சொல்வது சுவாரசியக் குறைவாக இருக்கலாம். ஏன் சுவாரசியம் குறையும் என கேட்கிறீர்களா? அதான் சொன்னேன் இல்லையா நான் மற்றவர்களுடன் பேசுவது குறைவென்று.
சொல்லிக் கொள்ளும்படி பெரிய வேலையில் இல்லை (தன்னடக்கம்). அதை நீங்க பிறகு தெரிஞ்சுக்குவிங்க. வயசு 25 ஆகுது. தலைநகரில் இருக்கேன். இப்போதைக்கு நான் ஒரு இளைஞன் என சுருக்கமாகச் சொல்லிக் கொள்கிறேன்.
சரி நாளை சந்திப்போம்.. மறக்காம வந்திடுங்க... ஓ.. சொல்ல மறந்துட்டேன் பார்த்திங்களா இந்தக் கதையில் தலைப்பு:
60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்.
பி.கு: கதைக்கு தலைப்பை தேர்வு செய்ய உதவிய வல்லவன் அதிஷாவுக்கு நன்றி.

27 Comments:

ஜோசப் பால்ராஜ் said...

தம்பி விக்கி,
தொடர் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

Anonymous said...

தலைப்பே "கிளுகிளு" ன்னு இருக்கே !!!

தொடரில் படங்களும் இடம்பெறுமா ?

குசும்பன் said...

ஜ்வோராம் சுந்தர் கதைக்கு போட்டியாக இக்கதை மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
//60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்.//

கதை தலைப்பே சூப்பர்!

குசும்பன் said...

பாரி அரசு என்பவரி கதைதான் அதனால் தான் அவனுக்கு பாரிதாசன் என்று பேர் வைத்துஇருக்கிறீர்கள் என்று செய்திகள் வருகிறதே உண்மையா?

குசும்பன் said...

//நான் மற்றவர்களுடன் பேசுவது குறைவென்று.//

எல்லோரிடமுமா? இல்லை ஒத்த துருவங்களோடு மட்டுமா?:)))

குசும்பன் said...

//தலைநகரில் இருக்கேன். இப்போதைக்கு நான் ஒரு இளைஞன் //

அப்ப கொஞ்சம் நேரம் கழித்து கிழவனா? இப்படி ஏகப்பட்ட டவுட்டுகளை கண்ணாப்பின்னாவென்று கிளப்பிவிடுகிறது.
(சூர்யா படம் போல் இருக்கும் என்று நினைக்கிறேன்)

குசும்பன் said...

// பி.கு: கதைக்கு தலைப்பை தேர்வு செய்ய உதவிய வல்லவன் அதிஷாவுக்கு நன்றி//

டைட்டில் சாங், மீயுசிக் எல்லாம் முடிவாகிவிட்டதா?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஜோசப் பால்ராஜ்

நன்றி அண்ணே.

@செந்தழல் ரவி

போட்டிடலாம். என்ன படம் வேணும்னு ஒரு இமெயில் பண்ணுங்க. இன்று லக்கி அண்ணாச்சி பதிவில் பார்த்தேன். பக்கத்து மேசையில் இன்னும் கிளு கிளுப்பு அதிகமா இருக்காமே. :))

@குசும்பன்
1) ஆஹா... இப்படி உசுப்பேத்தியே உடம்ப ரணகலமாக்கிடுறாங்கய்யா...

2) அய்யோ... எனக்கு ஆப்பு வைக்கிறதுல உங்களுக்கு என்ன சந்தோஷம் பாஸ்.

3)//எல்லோரிடமுமா? இல்லை ஒத்த துருவங்களோடு மட்டுமா?:)))//

:((( புரியலையே...


4) எஸ்.ஜே.சூரியாவா... ஹி ஹி ஹி அப்படி இருந்தா நல்லா இருக்கும்ல...

5) ஆச்சுங்க... பாட்டுக்கு வாயசைக்க போறது நீங்கதான்.

anujanya said...

சும்மா போட்டுத் தாக்கு. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள்!!!
:)

A N A N T H E N said...

கதைக்குக் கலக்கலான முன்னுரை
தலைப்பும் நல்லா இருக்கு... ஆவலைத் தூண்டுது

படத்த பார்த்ததும் கிளுகிளுப்பாயிட்டேன்... கதையிலும் கிளுகிளுப்பு இருக்குமில்ல?

Anonymous said...

தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

3)//எல்லோரிடமுமா? இல்லை ஒத்த துருவங்களோடு மட்டுமா?:)))//

:((( புரியலையே...//

நியுட்டனின் விதி ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கும் , எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்(யப்பா நீர் காண்வெண்டில் படித்து இருந்தால் யாரிடமாவது மொழிபெயர்த்து வாங்கிக்கவும்)

அதுபோல் பேசமாட்டான் என்றால் ஒத்த துருவம் என்றால் ஆணிடம் மட்டுமா? இல்லை பெண்ணிடமும் பேசமாட்டானா என்று கேட்டேன்.

நம் வலைபதிவர்களில் பலரிடம் இந்த ஒத்த துருவ கருத்துகளை செயல் முறையில் காணலாம்.
(எ.கா: ஜெகதீசனிடம் ஹாய் சொன்னீங்க என்றால் 1 மணி நேரம் கழித்துதான் சொல்லுங்க என்று வரும்:))

வால்பையன் said...

மிக அருமையான "பின்நவினத்துவ" கதை ஒன்று உங்களிடம் எதிர்பார்க்கிறேன்
ஆனால் மிக முக்கியமாக அதில் உங்களின் "முன் அனுபவம்" இடம் பெறவேண்டும்.

Athisha said...

ஆரம்பமே அசத்தலா இருக்கே

ஹேமா said...

தொடருங்கள்.
தொடருக்கு வாழ்த்துக்கள்.

http://urupudaathathu.blogspot.com/ said...

தொடர் வெற்றி பெற மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்..
தலைப்பு சும்மா அதிருது ..

VIKNESHWARAN ADAKKALAM said...

@அனுஜன்யா

நன்றி

@ஜெகதீசன்

நன்றி

@ஆனந்தன்

கிளு கிளுப்பா ஓகே. போட்டிடலாம்.

@வடகரை வேலன்

வேலன் அண்ணாச்சி ரொம்ப நன்றி.

@ குசும்பன்

//ஜெகதீசனிடம் ஹாய் சொன்னீங்க என்றால் 1 மணி நேரம் கழித்துதான் சொல்லுங்க என்று வரும்//

ஒரு மணி நேரம் தானே அதில் என்ன வந்தது. அவர் பதில் சொல்வதற்குல் நீங்கள் அவசரபட்டால் எப்படி. ஒரே குசும்பு.
பதிவர் சந்திப்பிலும் அப்படிதான் அவர் பேசுவதற்குல் எல்லோருமா சேர்ந்து சந்திப்பை முடிச்சிட்டு போயிடுறாங்க. என்ன அவசரமான உலகமய்யா இது.

VIKNESHWARAN ADAKKALAM said...

@வால்பையன்

என்னா ஒரு வில்லத்தனம். இப்ப உங்க குடுமி என் கையில். இரகசியம்... அது... ஜாக்கிரதை.... சொல்லமாட்டேன்...

@அதிஷா

நன்றி அதிஷா

@உருப்புடாதது அணிமா

மிக்க நன்றி. மீண்டும் வருக.

@ஹேமா

நன்றி

வெட்டிப்பயல் said...

நல்ல அறிமுகம்... கதைக்கு ஆவலுடன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@வெட்டிபயல்

நன்றிங்க அண்ணாச்சி. கத போட்டாச்சிங்கோ...

வெங்கட்ராமன் said...

வித்தியாசமான அனுகுமுறையில் ஆரம்பித்திருக்கிறீர்கள்.

Start Music . . . . .

அப்ப கதையோட ஹீரோயின் யாராக இருந்தாலும் ஸ்ரேயா படம் தான் போடுவீங்க கரெக்டா. . .:-)))))

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்! கலக்குங்க!

ஹேமா said...

//தொழுவத்தில் இருக்கும் ஒவ்வொரு பசுவும் அவர்களுடை பிள்ளைகள். புல் வைக்கும் போதும், பால் கறக்கும் போதும் மறுமொழி பேசாத அந்த ஜீவன்களோடு இவர்கள் பேச மறப்பதில்லை.//

பிடிச்சிருக்கு.கதை அழகாகத் தொடங்கியிருக்கிங்க விக்கி.ஒரு வேளை உங்க சொந்தக் கதையோ!

VIKNESHWARAN ADAKKALAM said...

@வெங்கட்ராமன்

நன்றிங்க... கதையை படித்து பார்த்து சொல்லவும். கண்டிப்பாக ஸ்ரேயா படம் தான்.

@நாமக்கல் சிபி

நன்றி.

@ஹேமா

ஹேமா பின்னூட்டத்தை ஏன் மாற்றி போடுகிறீர்கள்.

ISR Selvakumar said...

தலைப்பே பலவிதமாக யோசிக்க வைக்கிறது. நீங்க கொஞ்சமா பேசினாலும் 60 விதமா சிந்திக்க வைச்சிட்டிங்க.

VG said...

what a great introduction. impressive... :)