Monday, September 1, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (2)

அத்தியாயம் 2


"போன வருசம் வந்துட்டு போன பிறகு நீ இந்தப் பக்கம் தலை காட்டவே இல்லை. இன்னும் கொஞ்சம் நாள் போனால் உன் முகமே எல்லோருக்கும் மறந்திடும் போல. உன் மாமா கூட அப்பப்ப உன்னை பத்தி விசாரிப்பாரு. அவர் ஞாபகமாவது உனக்கு இருக்கா?''

"அப்படி என்ன உங்க அண்ணனுக்கு என் மேல பாசம்? என்னன்னு விசாரிச்சாரு?'' அம்மாவின் கேள்விக்கு கேள்வியே பதிலாய் வந்தது.

"எங்க உன் பையன ஆளயே காணும், ஏதாவது பொண்ண கட்டிக்கிட்டு ஓடிட்டானானு கேப்பாரு". அம்மாவுக்கும் கிண்டல் அதிகமாகிவிட்டது.
"ஓ… அப்படியா, இதோ இப்ப வந்திருக்கேன், அவர் பொண்ணை எனக்குக் கட்டி வைக்கச் சொல்றிங்களா?". நானும் கிண்டல் பேச்சில் சளைத்தவன் இல்லை என்பதாக பதில் கொடுத்தேன்.
"டேய் பெரியவங்கள அப்படியா பேசறது. படவா"
"அதுக்கில்லைமா, அவர்தான் நான் எவளையாவது இழுத்துக்கிட்டு ஓடிடுவேனு சொல்றாரே, அவருக்கு இருக்கும் மூணு பொண்ணுல ஒன்னை எனக்கு கட்டி வச்சிட்டா நான் ஓடிட மாட்டேன் இல்லையா". என் பேச்சில் மீண்டும் கிண்டல் இருந்தது.
"என் அண்ணன் பொண்ணுங்களுக்கு என்னடா குறைச்சல். மூக்கும் முழியுமா அழகாத்தானே இருக்காளுங்க". இதற்கு மேல் நான் பேசினால் வில்லங்கமாய் போய்விடும் என என் மனம் சொன்னது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நளினா என் நினைவை ஆக்கிரமித்தாள். அவளைத் தவிர்த்து வேறு பெண்ணா. ஒருக் காலும் நடக்காது. அவள் அல்லவா அழகி. என் மனதின் நாயகி.


******

திடீரென ஒலித்த கைபேசியின் சத்தம் என் நினைவுகளுக்கு மூட்டை கட்டியது. யாராக இருக்கும்? நளினாவா? அழைப்பு வந்த பெயரைக் கூட கவனியாமல் பேசும் விசையை அழுத்தி காதில் வைத்தேன்.

"ஹாலோ பாரி".

"சொல்லுங்க மா, நல்லா இருக்கிங்களா? என்ன விசயம்?" அது நளினா இல்லை. என் அம்மா தான் அழைத்திருந்தார்.

"நான் நல்லா இருக்கேன், இன்னிக்கு பாட்டி வீட்டுக்கு கிளம்பனும். உனக்காகதான் காத்திருக்கேன். பாட்டிக்கிட்டயும் மாமாகிட்டயும் நீ வரதா சொல்லியாச்சு.நீ உடனே கிளம்பி வா. நீ வராம நான் போறதா இல்லை''.
"யாரைக் கேட்டு நான் வரப் போறதா முடிவு பண்ணுனிங்க, எனக்கு இங்க நிறைய…..".

"நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் இங்க எல்லாம் ரெடி பண்ணிட்டேன். நீ வந்ததும் கிளம்புறோம்" பட்டென அழைப்பை துண்டித்துவிட்டார்.

இப்போது நான் யாரைச் சமாளிப்பது. நளினாவையா இல்லை என் அம்மாவையா? இன்னும் சற்று நேரத்தில் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு நளினா வந்துவிடுவாள். மூன்று வாரமாக அவளைக் கவனிக்காத தொல்லை. சரி இந்த விடுப்புக்கு வெளியே போய் வரலாம் என சொல்லி வைத்தேன். இப்போது முடியாது என சொன்னால் பத்திரகாளியாகிவிட மாட்டாளா?

செய்வதறியாமல் அமர்ந்திருந்தேன். அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன் என எந்த யோசனையும் ஏற்படவில்லை. இந்த விடுமுறை அமைந்ததை விட வேலை நாளாகவே இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. சிந்தனைக்கள் மூலைக்கொன்றாய்ப் பறந்துக் கொண்டிருந்தது. என் அறைக் கதவு தட்டபடும் ஓசையைக் கூட நான் அறியவில்லை.

லேசாக திறக்கப்படும் அறைக்கதவை என் எரிச்சலான பார்வையோடு எதிர் நோக்கினேன். வேறு யாருமல்ல. என் அழகுப் பதுமை நளினாதான்.
"ஹாய் பாரி" மலரென புன்னகையை உதிர்த்து என்னை நோக்கினாள்.

இன்று எவ்வளவு அழகாய் ஆடை அணிந்திருக்கிறாள். நளினா என் ரசனை அறிந்தவள். பேரங்காடிகளுக்குப் போகும் சமயம் அவள் தேர்ந்தெடுக்கும் ஆடைகளைப் பார்த்து நொந்து போய் இருக்கிறேன். என் ரசனைக்கு மாறுபட்டது அவள் ரசனை. நவீனம் எனும் பெயரில் விளங்காததை மாட்டிக் கொண்டு அலைவதை நான் கண்டித்துக் கூறியிருக்கிறேன். அன்றே எனக்காக அவள் ரசனையை புதைத்துவிடாள். இன்று என் ரசனைக்கேற்ற நளினாவை காண்கிறேன்.

"எப்படி?''

"ம்ம்ம்… ரொம்பவே அழகா இருக்க", நான் ஏதோ பகடியடித்தை போல நளினா சிரித்தாள்.

"நான் அழகா இருக்கிறது இருக்கட்டும், நம்ப ப்ளான் என்னாச்சுப்பா?''.

என்ன சொல்வது. என் மூச்சை லேசாக அடைத்தது. என்னதான் நடக்கப் போகிறது என நினைத்து லேசாக தலைச் சுற்றியது. செல்லிதான் ஆக வேண்டும். வேறு என்ன செய்ய முடியும்.
மறுப்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தேன்.
"ஏன் என்ன ஆச்சு".
"முடியாதுனு நினைக்கிறேன்". வருத்தத்தோடுதான் கூறினேன்.
"பாரி உன் விளையாட்டுக்கு அளவே இல்லை. சரி கிளம்பு. போகலாம்".

"இல்லை நளி, உன்மையா தான் சொல்றேன்".
"ஏன்?" கண்கலங்கியவளாய் குரல் தழுதழுக்க கேட்கிறாள்.
அவளுக்கு கோபம் தலைக்கேறிக் கொண்டிருக்கிறது. என் அமர்விடத்தை விட்டெழுந்து அவளை நோக்கினேன். என் மனதிற்குள் கேட்டுக் கொள்கிறேன். 'அவளைச் சமாதானப் படுத்தமுடியுமா?'.
காதலில் எனக்குப் பிடிக்காத விசயமே கோபமடைந்த காதலியை சமாதானப்படுத்துவது தான். காதலில் பிரச்சனைகளே இல்லாமல் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

அவள் முகவாய்க்கட்டையை நிமிர்த்தினேன். கண்கள் சிவந்து போய் விட்டிருந்தது. கருமேகம் சூழ்ந்த வானத்தை போல் முகம் களை இழந்து போய் இருந்தது.

"என்னை புரிஞ்சிக்க நளினா, அம்மா அவசரமா போன் பண்ணி கண்டிப்பா வர சொல்லிட்டாங்க. நான் போகலனா பிரச்சனையாகிடும்".

காது இடுக்கில் அவள் முடியை கோதிவிட்டபடி கூறினேன். சலித்துக் கொண்டே நெருப்புப் பார்வையை என் மீது வீசினால்.
"வீட்டுக்கு போக மாட்டேன்னு தானே சொன்ன? வெளிய போலான்னு ப்ளான் பன்னினது கூட நீதானே."

"ஆமா… ஆனா இந்த முறை முடியாது…".
"அதுக்குள்ள அம்மா பிள்ளையா மாறிட்டியேடா".
"அவுங்க என் அம்மா, என் அம்மாவுக்கு நான் முக்கியதுவம் கொடுக்காமல் இருக்க முடியுமா?, என் நிலைமையில் உன்ன வச்சு யோசிச்சுப் பார்த்தா உனக்கே புரியும் நளினா".

"அப்ப நான் உனக்கு முக்கியம் இல்லையாடா" அழுகை தாளாமல் கேட்டாள். அவள் தோள் மீது இருந்த என் கையை உதறித் தள்ளினாள்.

"நளி ரெண்டே நாள் தான்டா, ஞாயிற்றுக் கிழமை கண்டிப்பா வீட்டிலிருந்து கிளம்பிடுவேன். வந்ததும் முதல் வேலையா உன்னை வந்து பார்க்கிறேன். சரியா?"

அவள் சமாதானம் ஆனதாக எனக்குத் தெரியவில்லை. கோபம் எனும் அரக்கன் அவள் அழகை மாசு படுத்தத் தோற்றுப் போனான். இப்பொழுதும் அவள் எனக்கு அழகாய் தான் தெரிகிறாள். அவளை சோகமாக்கிவிட்டேனே. இப்படி ஒரு சூழ்நிலை உருவானதற்கு என்னையே நான் நொந்து கொண்டேன். அவளோ முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டாள்.

"உன் இஷ்டம் பாரி.. சரி நான் வீட்டுக்கு போறேன்." என் அறைக் கதவை பாதி திறந்தவளாய் என்னை நோக்கினாள்.

"என்ன வீட்ல கொண்டு போய் விட மாட்டியா." இந்தக் கேள்வியை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை.
"ஆ… ஆ…. நீ உன் கார் கொண்டு வரலயா."
"ஹும்…"

கோப அனலை கக்கியவள், என் அறைக் கதவை இழுத்து சாத்தினாள். அக்கதவுக்கு மட்டும் உயிர் இருந்திருந்தால் மடிந்து போயிருக்கக் கூடும். இல்லையென்றால் கொச்சை வார்த்தைகளில் அவளை அது திட்டியிருக்கக் கூடும். அது என் மீது காட்ட வேண்டிய கோபம் தான். கதவின் மீது காட்டி இருந்தாள். அவள் கதவை சாத்திய விதம் என் கன்னத்தில் விழுந்த அறையென தோன்றியது.

அவளை சமாதானப் படுத்த முயன்றதில் என் தொண்டைத் தண்ணீர் வற்றிப் போயிற்று. வார்த்தைகளை அடுக்கிச் சொல்ல எவ்வளவு சிரமமாகி விட்டது. என் மாடித் திரைத் துணியை விலக்கி கீழே நோக்கினேன். விரு விரு வென நடந்து போகிறாள் நளினா. என் அறைக் கதவை போலவே அவள் கார் கதவும் அறையப்படுகிறது.

தொடரும்...

28 Comments:

ஜோசப் பால்ராஜ் said...

முதல் பகுதியை விட இரண்டாவது பகுதியில் வேகம் அதிகம் இருக்கிறது. (நளினி கதவை வேகமா அடிச்சு சாத்துனத சொல்லலப்பா, கதையோட வேகத்த சொன்னேன்.) இதே வேகத்தை தொடர்ந்து கொண்டு போங்க. அப்பத்தான் சுவாரசியமா இருக்கும்.


வாழ்த்துக்கள்.

விஜய் ஆனந்த் said...

:-)))...

குசும்பன் said...

இன்றுமுதல் தொடர்கதை சூறா”வலி” விக்னேஸ்.

என்று அழைக்கப்படுவர்.

குசும்பன் said...

1) ரொம்ப அருமை! மிக இயல்பாக இருக்கிறது!

குசும்பன் said...

2) அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங் !!!

குசும்பன் said...

3) வாரம் ஒரு முறைதானா? :((((

குசும்பன் said...

4) ஹீரோ டயலாக சூப்பர் , ஹீரோயின் டயலாக் சூப்பர்

குசும்பன் said...

5) நல்ல எழுத்து நடை!

குசும்பன் said...

6) கடைசி வரியில் அடுத்த பாகத்துக்கான் எதிர்பார்பை தூண்டி விட்டு விடுகிறீர்கள்!

குசும்பன் said...

7) சீக்கிரம் தொடருங்கள்!!!

குசும்பன் said...

8)//ம்ம்ம்… ரொம்பவே அழகா இருக்க", நான் ஏதோ பகடியடித்தை போல நளினா சிரித்தாள்.
"நான் அழகா இருக்கிறது இருக்கட்டும், நம்ப ப்ளான் என்னாச்சுப்பா?''.
//

நான் ரசித்த வரிகள்

குசும்பன் said...

9) கதை போல் இல்லை சொந்த அனுபவமோ!!!

குசும்பன் said...

10) தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர் கதை போல இருக்கு.

குசும்பன் said...

11) அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதவும்!!!

குசும்பன் said...

13) முடிவை அறிய ஆவலாக உள்ளேன் தனிமடலிலாவது சொல்லவும்!!!

குசும்பன் said...

14) முந்தைய பாகங்களை தேடி தேடி படித்தேன் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது உங்கள் தொடர்.

குசும்பன் said...

15) மிகவும் விறு விறுப்பாக இருக்கிறது.

குசும்பன் said...

விக்னேஸை தவிர மற்றவர்கள் இந்த பதிவை படிக்கவும் உங்களுக்கு உபயோகமாக இருக்கு.

http://kusumbuonly.blogspot.com/2007/12/blog-post_05.html

Anonymous said...

நல்லாயிருக்கு தம்பி... :)

ஜெகதீசன் said...

நல்லா இருக்கு......
:)

வால்பையன் said...

உரையாடல்களை ஒருவரி அல்லது இருவரியாக தனி தனியே இடவும்!

காட்சியமைப்புகளை திரைக்கதை போல் விவரிக்கவேண்டிய அவசியமில்லை.

"கதவை வேகமாக சாத்துதல்" உணர்வின் வெளிப்பாடு அதனால் அது போன்ற காட்சிகள் விதிவிலக்கு.

மூன்று அல்லது நான்காம் பாகத்தில் ஏதாவது ட்விஸ்ட் நீங்கள் கொடுக்கலாம் அது எங்களுக்கு தெரியாதே! அதனால் முடிக்கும் போதே
"நாளை நடக்கபோவது தெரியாமல் அமைதியாக அவளை பார்த்து கொண்டிருந்தான் பாரி"

இவ்வாறு முடித்தால் எதிர்பார்ப்பு அதிகமாகும்! அதே நேரம் அடுத்த பாகத்தில் அதற்குண்டான சரக்கை சேர்க்கவேண்டும்.

அதற்கு தினமும் சரக்கடிக்கவேண்டும்.
(அம்மா மற்றும் காதலிகள் மன்னிக்கவும்)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஜோசப் பால்ராஜ்

நன்றி. கண்டிப்பாகச் செய்கிறேன்.

@விஜய் ஆனந்த்

நன்றி

VIKNESHWARAN ADAKKALAM said...

@குசும்பன்

நன்றி

@சேவியர்

நன்றி அண்ணே...

@ஜெகதீசன்

நன்றி

@வால்பையன்

நன்றி. நல்லக் கருத்தும் அறிவுரையும். மேற்கொள்கிறேன்.

Thamiz Priyan said...

இன்னைக்கு தான் படிக்க நேரம் இருந்தது. நல்லா இருக்கு... :)

Thamiz Priyan said...

///மூன்று அல்லது நான்காம் பாகத்தில் ஏதாவது ட்விஸ்ட் நீங்கள் கொடுக்கலாம் அது எங்களுக்கு தெரியாதே! அதனால் முடிக்கும் போதே
"நாளை நடக்கபோவது தெரியாமல் அமைதியாக அவளை பார்த்து கொண்டிருந்தான் பாரி"

இவ்வாறு முடித்தால் எதிர்பார்ப்பு அதிகமாகும்! அதே நேரம் அடுத்த பாகத்தில் அதற்குண்டான சரக்கை சேர்க்கவேண்டும். ///
இதுக்கு ரிப்பீட்ட்ட்டே

Anonymous said...

இன்று தான் நேரம் கிடைத்தது..இத்தனை நாள் 'மிஸ்' பண்ணிட்டேன். காதலில் வரும் ஊடலும் அதற்கு போட்டியாக வரும் பெற்ற பாசமும் ரசிக்க வைக்கிறது...அம்மா-பிள்ளை-காதலி, நல்ல தேர்வு..நல்லா இருக்கு விக்னேஸ்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@தமிழ் பிரியன்

நன்றி

@மலர்விழி

நன்றி

VG said...

intha kataiyil piditha varigal...

~~காதலில் எனக்குப் பிடிக்காத விசயமே கோபமடைந்த காதலியை சமாதானப்படுத்துவது தான்~~

~~அக்கதவுக்கு மட்டும் உயிர் இருந்திருந்தால் மடிந்து போயிருக்கக் கூடும். இல்லையென்றால் கொச்சை வார்த்தைகளில் அவளை அது திட்டியிருக்கக் கூடும்.~~

intha variyil unga karpanai piditirukkirathu... :))