Thursday, November 6, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (12)

அத்தியாயம் 12

நந்தினி ஊருக்கு கிளம்பி நான்கு நாட்களாகிவிட்டன. இப்போதெல்லாம் வேலையில் சரிவர கவனம் செலுத்த முடியாததை போன்ற எண்ணமே அடிக்கடி தோன்றி மறைகிறது. அன்று அலுவலகத்தில் இருந்த போது அம்மா தொலைபேசினார். நந்தினி ஊரில் இருந்து வருவதாகவும் பேருந்து நிலையத்திற்குச் சென்று என்னை அழைத்துவரும்படியும் கூறினார்.

அம்மா தொலைபேசிய போது காலை மணி 10.20. எப்படியும் நந்தினி இங்கு வந்தடைய இன்னும் 1.30 மணி நேரத்திற்கு மேலாகும். அலுவலக வேலைகள் தலைக்கு மேல் இருந்தது. நான் அவளைச் சென்றழைப்பது கடினம் என்றே கருதுகிறேன்.

"அம்மா! அவள டாக்ஸி பிடிச்சி வீட்டுக்கு வந்திட சொல்லுங்க. எனக்கு வேலை அதிகமா இருக்கு".

"டேய்! கிறுக்குப் பய மாதிரி பேசாதடா, பொண்டாட்டிய தனிய வர சொல்லுறியே. அவ இந்த ஊருக்கு புதுசு டா. ஆபீஸ்ல சொல்லிட்டு, அவள போய் அழைச்சிட்டு வா". நான் பயப்பட மாட்டேன் என தெரிந்தும் அதட்டலாகவே சொன்னார்.

இன்னும் சற்று நேரத்தில் முதலாளியுடனான சந்திப்பு தொடங்கிவிடும்.எந்நேரத்திலும் எனது மேசை மீதிருக்கும் இண்டர்காம் ஒலிக்கலாம். முதலாளி என்னை அழைக்கலாம். மேசை மீது தயார் படுத்தி வைத்திருந்த கோப்புகளை சரி பார்த்துக் கொண்டேன்.

அம்மாவின் நினைவுறுத்தல் என் கவனத்தைச் சிதறடித்தது. நந்தினியை அழைத்து வரச் செல்வதா இல்லை முதலாளியுடன் சந்திப்பா? யோசிக்கவே சிரமமாக இருந்தது.

"மச்சான் ரெடியாகிடிட்டியா? அந்த ஆள பார்க்கவே பயமா இருக்குடா. கடு கடுனு இருக்காரு."

"5 நிமிசத்துக்கு ஒரு தடவ போன்ல தொங்குற இல்லைனா காணாம போயிடுற பின்ன ஏசாம கொஞ்சுவாங்களா?"

எனது குழுவினரோடு அன்றய சந்திப்பில் படைப்பினை சமர்பித்தோம். அதில் ஒரு நிறைவு கிடைத்ததாக மேனேஜரின் முகத்தில் இருந்த புன்னகையில் அறிய முடிந்தது. என் கைக்கடிகாரத்தைப் பார்த்த போது நேரம் மதியம் 1.

நிறுவணத்தில் அனைவரும் மதிய உணவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். எனக்கு அதில் மனம் சொல்லவில்லை. வீட்டிற்கு தொலை பேசினேன்.

" 'ஹலோ' அம்மாவா?"

''இல்லை நந்தினி பேசுறேன்'' தூக்கி வாரி போட்டது. அதற்குள் வீட்டில் இருக்கிறாளா. காலம் எவ்வளவு விரைவாக உள்ளது!

"அம்மா இருக்காங்களா?" அவள் அம்மாவை அழைத்து தொலைபேசியைக் கொடுத்தாள்.

"டேய் எங்கடா போன?" வாய் திறப்பதற்குள் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

" மீட்டிங் இருந்துச்சுமா, அதான் போன் ஆப் பண்ணி வச்சிட்டேன்".

"ஹம்ம்ம்... பரவால... நந்தினி நல்லபடியா வீட்டுக்கு வந்துட்டா?"

"நீங்க தான் பயபட்டிங்க, அவ சரியா 'டேக்சி' ஏறி வந்துட்டா பாருங்க".

"அட போட. நல்ல வேளையா அவ ஃபிரண்ட அங்க பார்த்திருக்கா, அந்த பையன் தான் அழைச்சிட்டு வந்தான்".

எனக்கு தலை சுற்றியது. வீட்டுக்கு போகிறேன் என சொன்னவள் எதற்காக திரும்பி வர வேண்டும். கோலாலம்பூரில் அவளுக்கு யாரைத் தெரியும்? அழைத்து வந்த அந்தக் கேடு கெட்டவன் யார் என்றெல்லாம் சிந்தனை சிதறி ஓடியது.

மதிய உணவு தயாரனதும் வேலை செய்பவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டார்கள். நானும் கடமைக்காக சாப்பாட்டு மேசையில் அமர்ந்தேன். மரியாதைக்கு கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றேன். எனது உணவு வேளை ஒரு வெண்சுருட்டு புகைக்கப்படாமல் நிறைவு பெறாது. அன்று அளவுக்கு அதிகமாகவே மன உளைச்சல் என்னை வாட்டி இருந்ததால். வெண்சுருட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.

மணி 2.30 அலுவலகத்தினுள் நுழைந்தேன். மேசைமீதிருந்த நாட்குறிப்பைப் பார்த்தேன். எதிர் வரும் ஞாயிறு அன்று ஒரு சிகப்பு வட்டம் போட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆம நினைவிற்கு வந்தது. நளினா ஊருக்கு போவதாக சொன்ன தேதி.

பக்கத்திலேயே அவளது புகைப்படம். சின்னதாக 'ஃபிரேம்' போட்டு மேசை மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. என்னிடம் அடம்பிடித்து வைக்கச் சொன்னாள். வேலை நேரத்திலும் நீ என்னை மறக்காமல் இருக்கனும் அப்படினு சொல்வாள்.
இப்போது அதை நினைக்கையில் எனக்குள் லேசான புன்னகை.

இந்த வாரம் நளினா என்னைவிட்டு பிரிந்து போகிறாள். மனதுக்குள் ஏதோ ஒரு வித வலி இருக்கவே செய்தது. பிரிவு பாசத்தின் பிணைப்பு என்று கூட சொல்வார்கள். இக்கனம் மனம் அதை ஏற்க மறுக்கிறது.


மறுபக்கம் நந்தினியை பற்றிய எண்ணங்கள். அவளை அழைத்து வந்த ஆடவன் யார் என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவளிடம் இதை பற்றி கேட்க எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்று எனக்கு புரியவில்லை. உரிமை இருந்தும் இல்லாத ஒரு நிலை. 'ச்சே.. என்ன வாழ்க்கை இது' என்றே
வருத்திக் கொள்கிறேன்.

என் அறைக் கதவு தட்டபட்டதும் நினைவுகள் சட்டென்று காற்றில் கரைந்து காணாமல் போனது.

முரளி வந்திருந்தான்.

" ஏன் டா?" என கேட்டேன்.

"உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்."

" அதான் 'பிரசண்டேசன்' முடிஞ்சதே இன்னும் என்ன?"

"வேலை சம்பந்தமா இல்லை, வாழ்க்கை சம்பந்தமா பேசனும்." என்றான்.

எனக்கு மேலும் தலைவலி அதிகரித்தது.

தொடரும்...

8 Comments:

Anonymous said...

நளினா கிட்ட எப்ப சொல்லப் போறிங்க?

ஹேமா, said...

விக்கி,இப்போதான் பதிவு 10,11,12 வாசித்து முடித்தேன்.கதையை சுவாரஸ்யமாகக் கொண்டு போகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

விக்கி,என்னைச் சினிமாத் தொடருக்கு அழைத்ததாக என்னைக் கண்டித்து இருந்தீர்கள்.தேடினேன்.
காணவில்லையே!

வால்பையன் said...

ஆணாதிக்க சிந்தனையுடன் கதை திசை திரும்புகிறது.

கதையின் ஓட்டம் பாரியை சுற்றியே நகருவதும் ஒரு மைனஸ்.

ஒருவேளை கதைசொல்லி தான் கதையின் நாயகனோ என்ற சந்தேகம் வருகிறது.

ஒவ்வொரு தொடரிலும் கதையின் போக்கு கதையின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் சுற்றி நடப்பதாக காண்பித்தால் இன்னும் கொஞ்சம் சுவாரிசியம் கூடும்.
அது ஒரு புது பாணியாகவும் இருக்கும்.

வாழ்த்துக்கள்

Anonymous said...

arumai viknesh...thodarunggal...vaazthukkal :))

Unknown said...

அடுத்த அத்தியாயம் எங்கேயப்பா?

VG said...

hi, thx for dropping by... ungal attiyayam 12 arumai.. micham irukkum 11 padikka aasaiyaga ulatu. but, ippo enaku exam. i shall read it once my exam finish. :)

i like reading... :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ உஷா

சொல்லலாம்...

@ ஹேமா

நன்றி ஹேமா...

@ வால்பையன்

உங்கள் உண்மையான விமர்சனம் நான் எழுதும் சமயங்களில் எனது சித்தனையை ஆக்கிரமித்து சரியான முறையில் எழுத உதவி புரிகிறது... மிக்க நன்றி...

@ மலர்விழி

வருக்கைக்கு நன்றி...

@ விஜி

நன்றி...

A N A N T H E N said...

//யோசிக்கவே சிரமமாக இருந்தது.//
பாரி, அதெல்லாம் மூளை உள்ளவங்க செய்ய வேண்டியது, நமக்கு எதுக்குடாப்பா?

//... வெண்சுருட்டு புகைக்கப்படாமல்...//
சிகரட்டுக்கு இப்படி ஒரு வர்ணனையா பேஷ் பேஷ்