Monday, October 13, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (9)

அத்தியாயம் 9

நளினாவின் கேள்வி என் சிந்தனையை ஊருக்கு இட்டுச் சென்றது
. அது நந்தினியையும் என் நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது. என் கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. நந்தினி எனக்காக காத்திருப்பாளா? இல்லை தூங்கியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். விழித்திருந்தாலும் இருக்கலாம். ஆனால் அப்படி இருக்காது என்றே மனம் சொல்கிறது. எனக்கு காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்பதை அவள் புரிந்துக் கொண்டிருப்பாள்.

நீ என்னை உன் ஊருக்கு கூட்டிக்கிட்டு போவனு ரொம்ப எதிர் பார்த்தேன். ஆனா நீ ஒரு தடவை கூட என்னைக் கூப்பிட்டதே இல்லை.

அப்படி இல்ல.. கிராம வாழ்க்கை உனக்கு ஒத்து வாரதுன்னு தான் கூப்பிடல.

உன் கிராமம் அவ்வளோ மோசமானதா?.

மோசமான கிராமம் இல்லை. நீ இரசிக்கும்படியா ஒன்னும் இருக்காது. போர் அடிச்சிடும்.

ம்ம்ம்… அப்படினா உங்க அம்மாவைப் பார்க்கவாவது அழைச்சிகிட்டு போகலாம் தானே?

எதிர்பார்த்த கேள்விதான்
. இக்கேள்வியின் தாக்கத்தில் வாயில் வைத்த உணவுக் கூடத் தொண்டையில் இறங்க மறுத்துவிட்டது. கிண்ணத்தில் இருந்த நீரை பருகிவிட்டு அவளைப் பார்த்து ஒரு போலி சிரிப்பை உதிர்த்தேன். இந்நாள் வரையில் நளினாவைப் பற்றி அம்மாவிடம் ஒரு வார்த்தையும் கூறியது இல்லை. சொல்லவும் நினைத்ததில்லை.

அப்படி அழைத்துச் சென்றாலும் அம்மா திகைத்துப் போகலாம். நவநாகரிக வாழ்க்கை வாழ்ந்த நளினாவின் போக்கு அவருக்குப் பிடிக்காமலும் போகலாம். அப்படியிருப்பின் கண்டிப்பாகக் கல்யாணத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டார். வருத்தமும் படுவார்.

எப்ப போகலாம்?.

எங்கே போகனும்?. அவளது எல்லாக் கேள்விகளும் எனக்குக் கஷ்டமானக் கேள்விகளாகாவேத் தோன்றின.

உங்க அம்மாவை பார்க்க தான்.

எச்சிலை விழுங்கினேன்
. என்னதான் சொல்லித் தொலைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. ‘ஆம் என சொல்லி அவளை அழைத்துச் சென்றால் என்ன ஆகும். போதாக் குறைக்கு என் மனைவி என அடையாளமிடப்பட்டிருக்கும் ஒருத்தியும் உடன் இருக்கிறாளே. அப்படி அழைத்துச் சென்றால் ஓர் உலகப் போர் நடந்தாலும் நடக்கலாம்.

நேரம் வரட்டும் கண்டிப்பா அழைச்சிட்டு போறேன். சரியா, நான் அவள் கைவிரல்களை என் கையோடு அணைத்த படி சொன்னேன். அவள் அமைதி காத்தாள். அவள் கேள்வி ஏமாற்றமாய் போனதும் காரணமாக இருக்கலாம்.

மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது
. நளினாவை அவள் தங்கியிருக்கும் வீட்டினருகில் இறக்கிவிட்டேன். என்னை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தாள். கையசைத்துவிட்டு வீட்டில் நுழைந்தாள். நானும் ஒரு புன்னகை பரிசைக் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி விரைந்தேன்.

நான் நளினாவோடு பழக ஆரம்பித்த போது இனி என் வாழ்க்கை இவளோடு மட்டும் தான் என நினைத்திருக்கிறேன்
. இப்போது எல்லாமே மாறிவிட்டது. இந்த நாடகத்தின் முடிவும் அறிந்தபாடில்லை. அது எனக்குச் சாதகமாகவே இருக்க வேண்டும் என்ற சுயநலமும் என்னுள் இருந்துக் கொண்டே இருக்கிறது. தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் வாழ்வை வாழ்வதா இல்லை புதிய வாழ்க்கையை தொடங்குவதா என்றக் கேள்வியும் அடிக்கடி எழும்பிச் செல்கிறது.

நளினா தன் அப்பாவிடம் சொல்லப் போகிறேன் என சொன்ன போது நான் தடுக்கவில்லை
. அவள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் என்று தானே இதற்கு அர்த்தம். எனக்கும் அதில் உடன்பாடு இருக்கிறது என்றும் அவளுக்கு நம்பிக்கைக் கொடுக்கும் விதமாகவே நான் நடந்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

எனக்கு இந்நிலை ஏற்பட்டக் காரணம் திருமணம் எனும் பந்தம். அது ஏற்படக் காரணமாக இருந்தது நந்தினியின் திருமணத்திற்கு வராமல் போன மாப்பிள்ளை. இச்சமயம் நான் அவனைப் பார்க்க நேர்ந்தால் கொலைச் செய்யவும் தயங்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.

என் இரண்டடுக்கு மாடி வீட்டின் வளாகத்தினுள் நுழைந்தேன். அறையின் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. நந்தினி இன்னமும் தூங்காமல் தான் இருக்கிறாள் போல. வீட்டிற்கு வந்தால் சுதந்திரம் பறி போனதை போல் தோன்றுகிறது. எனக்குள் ‘இச் என்ற சளிப்பைக் கொட்டிக் கொண்டேன். எப்படி அறைக்குள் போவது. அவள் இருப்பாளே. என்னப் பேசுவது. எனக்காகதான் காத்திருக்கிறாளோ.

வாசல் கதவைச் சாத்திவிட்டு என் அறையை நோக்கி சப்தம் இல்லாமல் நடந்தேன். இருதயம் ‘பட் பட் என அடித்துக் கொண்டது. மெல்லமாக கதைவைத் திறந்தேன். அறையில் அமைதி குடிக் கொண்டிருந்தது.

நந்தினி நன்கு தூங்கிவிட்டிருந்தாள். எனக்குக் காத்திருந்திருக்க வேண்டும் அதனால் தான் விளக்கையும் அணைக்காமல் அப்படியே தூங்கிவிட்டிருக்கிறாள். அவளுக்கு நிலவை போல் குளிர்ச்சியான முகம். தூங்கும் போது கூடப் பார்ப்பதற்கு சிரித்தபடியே இருந்தாள். இந்த அழகு பதுமையையும் மணம் புரிய வராமல் போன அந்த மானங்கெட்டவனை என்னவென்று சொல்வது.

சாவிக் கொத்தை எடுத்து சிறிய அறையின் கதவைத் திறந்தேன். அந்த அறை எனது சிறு நூலகம் என சொல்லலாம். எனது கணினி புத்தகங்கள் என குவித்து வைத்திருப்பேன். இந்த அறையில் எனது ராஜாங்கம் மட்டும் தான். அம்மாவும் வரமாட்டார். ஊரில் இருந்து கிளம்பிய நாளிலிருந்து இந்த அறையில் தான் எனது அர்த்தமற்ற இராத்திரிக் கனவுகளை வளர்த்து வருகிறேன். நான் படுப்பதற்கு மட்டும் போதுமான அறை அது.

இந்த அறையை எப்போதும் பூட்டி வைத்துவிடுவதால் அதை சுத்தம் செய்யும் அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. இப்போது கூட பூட்டிதான் வைத்திருக்கிறேன். இதற்கு காரணம் நான் நல்லவன் என அடையாளமிட்டுக் கொள்வதற்கு இல்லை. என்னையே என்னால் சில சமயங்களில் நம்ப முடியாது என்ற காரணம் தான். நானும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட சாதாரண மனிதன் தானே. நினைவுகளை தூரத்திவிட்டு கண்களை மூடினேன்.

தொடரும்...

8 Comments:

வால்பையன் said...

கதை உயிரோட்டத்தில் தவறுகிறது.
யாரோ ஒரு கதை சொல்லி அவர்களுடைய அந்தரங்க சிந்தனைகளை தவிர்த்து மேலோட்டமாக சொல்வது போல் இருக்கிறது. இன்னும் அதிகமாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் உங்களை பொருத்தி விடுங்கள்.

அடுத்த பதிவு பயங்கர சூடாக இருக்கவேண்டும்

Anonymous said...

ஏன் விக்னேஸ்...பாரியை இப்படியெல்லம் அநியாயம் செய்ய வைக்கிறீங்க?!
பாவம் நந்தினியும் நளினாவும் :(

தயவு செய்து, உண்மையை யாராவது ஒருவரிடமாவது சொல்ல சொல்லுங்க...

Anonymous said...

Inthe thodar kathaiyin innoru vasagi nan. Kathai migavum arumaiyage poi kondu irukkirathu. Valltukkal!!! Kathayil nadanthe muthal thiruppumunai Paari Nanthini kaluthil thaali kattiyathu. Ithai niraye cinemavil parthu irunthalum, nengge sonne vitham nandrage irunthatu. Nanthiniyin mappillaikku yenna aachu?? avar yen kalyanathukku varevillai? Yethavathu ponne kuttitu oodi poitara? Itharkku piragu varum thiruppumunaigal melum katheyai swarisyemakkum ena nambugiren. Aduthe pativirkage wait pannuren. Athu varai valtukkal viknes :)

ஹேமா said...

விக்கி,தொடர் 7,8,9 வாசித்தேன்.சொல்ல என்று எதுவும் சொல்லவில்லை.இன்னும் எதிர்பார்க்கிறேன்.தொடரட்டும்.

Anonymous said...

ஏன் அடுத்த பதிவுக்கு இப்படி ஒரு இழுத்தடிப்பு?

இவ்வளவு gap தேவையில்லையே?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வால்பையன்

நன்றி...

@ மலர்விழி

நன்றி

@ நவா

வாங்க...

@ ஹேமா...

நன்றி

@ அனானி

மன்னிக்கனும்.

A N A N T H E N said...

//எனக்கு காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்பதை அவள் புரிந்துக் கொண்டிருப்பாள்.//
அந்த இரவு மட்டுமா இல்ல, வாழ்க்கை முழுக்கவா?

//“எங்கே போகனும்?”. அவளது எல்லாக் கேள்விகளும் எனக்குக் கஷ்டமானக் கேள்விகளாகாவேத் தோன்றின.//
அட ஆமாம்யா நிலைமைய புரிஞ்சிக்காம சில நேரத்துல....

//போதாக் குறைக்கு என் மனைவி என அடையாளமிடப்பட்டிருக்கும் ஒருத்தியும்//
என்ன கொடுமை சார் இது!

//அதனால் தான் விளக்கையும் அணைக்காமல் அப்படியே தூங்கிவிட்டிருக்கிறாள்.//
என்ன ஒரு கண்டுபிடிப்பு, கிரேட் பிரதர்

அவளுக்கு நிலவை போல் குளிர்ச்சியான முகம்.// ஆரம்பிச்சுட்டான்யா... சைட் அடிக்க

VG said...

aduthathu yenna aduthathu yenna... yeppa...