Thursday, October 9, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (8)

அத்தியாயம் 8


"பாரி" என் காதருகில் மெல்லிய குரல்.


"அமைதியாவே இருக்கியே? என்னாச்சு? என் 'டிரஸ்' பிடிக்கலையா?"


"நீ ரொம்ப அழகா இருக்க, அதான் வாயடைச்சி போய்டேன்" புன்னகையோடு அவளிடம் கூறினேன்.


"உனக்கு பசிக்கலையா? எனக்கு பசிக்குது" கொஞ்சலாக சொன்னாள்.


"சரி வா சாப்பிடலாம்" என அவளை இழுத்துக் கொண்டு போனேன்.


"நீ சாபிடலையா?"


"சாப்பிடுறேன், ஆனா கொஞ்சமா. கல்யாணம் பண்ணுற வரைக்காவது தொப்பை இல்லாமல் இருக்கனும் இல்லையா".


"கல்யாணத்துக்கு திட்டம் போட்டாச்சா?" அவள் கேட்டாள். தவறான வார்த்தையைப் பேசியதாக உணர்ந்தேன்.


எதுவும் பேசாமல் அவள் கண்களை மட்டும் உற்றுப் பார்த்தேன்.


"அப்படியெல்லாம் இல்லை, வார்த்தைக்குச் சொன்னேன்".


"ஏன்? எனக்கு தெரிஞ்சிக்கனும். நம்ம எதிர்காலத்தை பற்றி என்ன சிந்திச்சி வச்சிருக்க?"


"சரி என்ன சாப்பிடப் போற நான் உனக்கு எடுத்து வைக்கிறேன்"


" எனக்கு முதலில் பதில் சொல்லு" அவள் முகம் பார்க்க என்னை இழுத்தாள்.

இது எனக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலையாகவே தெரிந்தது. மிக எரிச்சலான கேள்வியைக் கேட்டுத் தொலைக்கிறாளே என மனதுள் வெந்தேன்.


"நளினா, கல்யாணத்தப் பற்றி இப்ப என்ன பேச வேண்டி இருக்கு? இன்னும் வயசிருக்கு. நான் அதுக்கு இன்னும் 'ரெடியாகல".


" நான் 'ரெடியா' இருக்கேண்டா".


"சரி 'ஜோக்' அடிச்சது போதும். முதல்ல சாப்பிடு".


"நான் 'சீரியஸா' பேசுறேன், உனக்கு என்ன பிடிச்சிருக்கா இல்லையா? என்னை காதலிக்கிறதானே?".


வெட்கப்பட்டுக் கொண்டு கேட்டாள். அவள் ஈரவிழிகளில் விட்ட அம்பு என்னைத் துளைத்தது.

"என்ன பதில் பேச மாட்ற, நான் என்னைப் பார்க்க சொல்லல, பதில் சொல்ல சொன்னேன்".


" உன்னை நான் ஆசை படுறத உன்னால புரிஞ்சிக்க முடியலையா நளி".


"அதை நீ வாய் திறந்து சொல்லனும் இல்லையா?".


"ஆமாவா?".


அவள் மெல்லிய புன்னகை புரிந்தாள்.


"இதெல்லாம் சொல்லிதான் புரியனுமா என்ன?".


"நீ சொல்றத கேட்க எனக்கு ஆசையா இருக்குடா".


" ம்ம்ம்பிறகு ஒரு நாள் சொல்றேன்".


"எப்போ".


" உன்னைக் கட்டிக்கிட்ட பிறகு".


இந்த பதிலை சொன்னதும் என் மனசாட்சியை நானே செருப்பால் அடித்துக் கொண்டத்தை போல் இருந்தது. ஏன் இப்படி நடந்துக் கொள்கிறேன். எனக்குத் திருமணமாகிவிட்டது. எனக்கே நான் போலி முகம் போட்டுக் கொண்டு நடிக்கிறேனே. எவ்வளவு துன்பகரமானது இந்த வாழ்வு.


இப்போதைக்கு நளினாவை சமாதானப்படுத்தப் பேசிவிட்டேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே சமாளிப்பது. ஒரு வழியாக இப்போதை கண்டத்தில் தப்பித்துவிட்டேன். இதுவே ஒரு சாதனை தான்.


உணவை எடுத்துக் கொண்டு ஒரு இடம் பார்த்து அமர்ந்தோம். மெல்லிய வெள்ளை விளக்கொளியோடு இரவு பணியும் அச்சூழலை மிகக் குளிர்சியாக வைத்திருந்தது. இரம்மியமான சூழல். என்னோடு என் மனமும் அதை இரசித்தது.


நளினாவின் பார்வை என்னை விட்டு அகலவில்லை. அந்தச் சிறு விழிகள் என்னையே பார்ப்பது மனதிற்குள் சுகமாக இருந்தாலும் ஏதோ ஒன்று உறுத்தியது.


" என்ன! என்னை சாப்பிடுற மாதிரி உத்துப் பார்த்துக்கிட்டு இருக்க". அவளிடம் கேட்டேன்.


" ம்ம்.. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.." அவள் முகத்தில் வெட்கம் இருந்தது.


அவளது பதில் என்னை அசடு வழியச் செய்தது. அவள் மீண்டும் தொடர்ந்தாள்.


"நான் அடுத்த வாரம் வீட்டுக்குப் போறேன்".


"என்னாச்சு வேலைப் பிடிக்கலையா. வீட்டோடு இருக்க போறியா?"


"இல்லடாஅப்பாவ பார்க்கப் போறேன். அப்பாகிட்ட நம்ம பத்தி சொல்லப் போறேன்".


அவள் சொல்லியது என்னவென எனக்கு உள்ளங்கை நெல்லிக் கனியாக விளங்கியது. இருந்தாலும் ஒன்றும் விளங்காதவனைப் போல் கேட்டேன்.

"நம்ம பத்தியா! என்ன சொல்ல போற?". என் எச்சிலை தொண்டைக் குழிக்குள் விழுங்கினேன்.

"எல்லாம் நம்ம விசயம் தான். உனக்கு என்ன பிடிச்சிருக்கு. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. நீ என்ன நேசிக்கிற. நான் உன்ன நேசிக்கிறேன். இப்படி சொன்னால் போதும். அப்பா புரிஞ்சிப்பாருனு நினைக்கிறேன்".


"அப்புறம்?".


"அப்புறம் என்ன அப்பா நமக்கு சம்மதம் சொல்லிடுவாரு".


இதைத்தான் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவது என சொல்வார்களா? என் நிலைத் தெரியாமல் பேசுகிறாள். தெரியவும் வேண்டாம் எனவே நான் நினைக்கிறேன். அவளது அப்பாவிடம் சொல்லி என்ன ஆகும்? என்னைப் பிடிக்காமல் போக என்னைத் தேடி வந்து உதைக்கலாம். இல்லையென்றால் சம்மதம் தெரிவித்து கல்யாணம் செய்துவிக்க முற்படலாம்.


"வீட்டில் அப்பாவ சமாளிச்சிடலாம். அம்மா தான் கொஞ்சம் கஷ்டம். அதான் முதலில் அப்பாகிட்ட சொல்லி அம்மா காதில் போட்டு வைக்க ஏற்பாடு பண்றேன்" அவள் தோளை உழுக்கி மீண்டும் வெட்கம் கொண்டாள்.


உண்மையைச் சொன்னால் எனக்கு அவள் பேசியது கடுப்பை தான் ஏற்படுத்தியது. துளியளவும் மகிழ்ச்சியில்லை. இந்த ஏற்பாடு நடக்காமல் இருந்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்.


"நீயும் வரீயா?". என் கைகளைப் பற்றிக் கேட்டாள்.


"ம்ம்ம்இல்லை கஷ்டம்எனக்கு 'லீவு' கிடைக்காது. இன்னும் 'ஆபீஸ்' வேலை எல்லாம் அப்படியே நிற்குது". முடிந்த அளவிற்கு சமாளிக்கப் பார்த்தேன்.


"சரி நீ எப்போ கிளம்பற?"


"அதான் சென்னனே, அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை. நீதான் என்னை வழியனுப்பனும். நீ ஊருக்குப் போகலையா?".


அந்தக் கேள்வியில் ஒரு விஷமம் இருந்தது.


தொடரும்...

9 Comments:

ஜெகதீசன் said...

;)

வால்பையன் said...

பெரும் பகுதி உரையாடலில் இருப்பது படிப்பதற்கு ஆர்வத்தை கொடுக்கிறது

வால்பையன் said...

க்ரைம் கதைகளில் இருக்கும் சஸ்பென்ஸ் காதல் கதைகளிலும் கொடுக்கலாம் என்று தெரிய வைத்திருக்கிறீர்கள்

வால்பையன் said...

இதே வேகத்தில் தொடரலாம்

Anonymous said...

Me the first. eppo boss mudipenga... interesting!!! Finish it soon....

--
Nila

Anonymous said...

:) நன்னா இருக்கு...
பாரி நல்லாவே கண்ணாமூச்சி விளையாடுறாரு...
:( எப்பய்யா முடிப்பீங்க!?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜெகதீசன்

நானும் :)

@ வால்பையன்

நன்றி

@ நிலா

வருகைக்கு நன்றி...

@ மலர்விழி

எப்போது முடிக்கனும்...

A N A N T H E N said...

//மிக எரிச்சலான கேள்வியைக் கேட்டுத் தொலைக்கிறாளே என மனதுள் வெந்தேன்.//
மிகச் சரி

//என்னோடு என் மனமும் அதை இரசித்தது.//
பாரி வேறு, அவன் மனம் வேறா? ரசிப்பதற்கு...

//என்னைப் பிடிக்காமல் போக என்னைத் தேடி வந்து உதைக்கலாம்.// நடந்தா சொல்லுங்க... ரசிச்சி பார்க்கனும்... ஹிஹிஹி

VG said...

shabaaa.........