வீட்டு மொட்டை மாடி தடுப்பின் மீது முதுகை சாய்த்து அமர்ந்திருந்தேன். இங்குதான் பழைய பொருட்களை போட்டு வைக்கும் அறை இருக்கிறது. ஆட்கள் வருவதற்கும் வாய்ப்பு குறைவு. இரவின் குளிர் காற்று மெல்லியதாய் வீசிற்று. தனிமையை தேடிய மனதோடு இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன்.
படிக்கட்டுகளில் நான் உறிந்து போட்டு வைத்திருந்த 'சிகரெட்டு' துண்டுகள் உயிரற்று கிடந்தன. என் கையில் வைத்திருந்த 'சிகரெட்டின்' புகை இருதயத்தின் காயங்களை மேலும் காயமாக்கி வெளியேறிக் கொண்டிருந்தது. மனம் வலித்தது.
அம்மாவும் நளினாவும் என் சிந்தனையை சிதைத்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிவிட்டேனே.
"பாரி இன்னும் தூங்க போகலையாப்பா?"
என் மாமாவின் குரல் கேட்டது. என் கையில் இருந்த சிகரட்டை தூக்கிப் போட்டுவிட்டு வாயில் இருந்த புகையை கக்கி ஊதினேன். இருந்தாலும் வாடை இருக்கும் அல்லவா?
"என்ன மன்னிச்சுருப்பா பாரி", அவர் குரலில் அமைதி இருந்தது.
"தப்பு என் பேரில்தான்", என்ன சொல்வதென அறியாமல் மௌனம் காத்தேன்.
"என் மேல கோபப்பட்டு என் பொண்ணோட வாழ்க்கையை வீணாக்கிடாதப்பா".
"இல்ல மாமா… நாமெல்லாம் ஒரு குடும்பம் தானே… உங்களுக்கு உதவி செஞ்சதில நான் சந்தோஷப் படுறேன்".
உடைந்த மனதோடு அவரை சமாதானப் படுத்தினேன்.
"சரிப்பா போய் படுத்துக்க, ரொம்ப நேரம் பனியில நின்னா உடம்புக்கு ஆகாம போயிடும்".
'சரிதான் போயா, என் வாழ்க்கையே விளங்காம போச்சு இப்பதான் உடம்புக்கு ஆகாதாம்' என் பாழாய் போன மனம் என்னுள் பேசிக் கொண்டது.
மாடியில் இருந்து பார்த்தேன் முதலிரவு அறையில் விளக்குப் போட்டு வெளிச்சமாக இருந்தது. என் மனம் 'திக் திக்' என அடித்துக் கொண்டது. நந்தினி என்ன செய்துக் கொண்டிருப்பாள்? தூங்காமல் இருப்பாளா? அப்படி இருந்தால் நான் என்ன செய்வது. சிக்கலில் சிக்கினேன்.
மெதுவாக அறைக் கதவைத் திறந்தேன். மல்லிகையின் மணம் சுவாச துவாரத்தை ஆக்கிரமித்து சுகந்தமான நறுமணத்தை கொடுத்தது. நந்தினி அங்கே இல்லை. எங்கே போயிருப்பாள்? இன்னமும் தூங்காமல் இருக்கிறாளா? எனக்காகவா? இல்லை ஒருபோதும் அப்படி இருக்காது.
முதலில் கூட பார்த்தேனே. சோகத்தின் அத்தியாயங்கள் அவள் முகத்தில் குடி இருந்ததை. புகைபடங்கள் பிடிக்கும் போது கூட மற்றவர்கள் கேட்டுக் கொண்டதற்காக அல்லவா சிரித்தாள். அந்த புகைப்படக் கலைஞன் அவள் இடுப்பை அணைத்தபடி ஒரு படம் எடுக்க வேண்டும் என்றான். பயம், வெக்கம், அவமானம் என அனைத்தும் ஒன்றென கலந்து அவர் உடல் எவ்வளவு சில்லிட்டிருந்தது.
பரிசு பொட்டலங்கள் ஓர் ஓரமாய் இருந்தது. அதில் மணமகனாக என் பெயர் இல்லை. நான் எதற்கு அதை நினைத்து கவலை கொள்ள வேண்டும். 'கிடக்குது கழுதை' என் மனம் எனக்கு சமாதானம் கூறியது.
நறுமணம் கமழும் மெத்தையின் மீது என் உடலைக் கிடத்தினேன். அடித்து போட்டதை போல் இருந்த உடலுக்கு சற்றே சுகமாய் இருந்தது. ஒரு நொடியில் என்னவெல்லாம் நடந்துவிட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பெண்ணுக்கு கணவனென மாறிவிட்டேனே. அதுவும் நான் நன்கு அறிந்த பெண்ணல்லவா அவள்.
பெரிய விளக்கை அணைத்துவிட்டு. மேசை விளக்கை மட்டும் போட்டு வைத்தேன். வெளியே போய் வரவேற்பு அறையில் படுத்துவிடலாமா என நினைத்தேன். மற்றவர்கள் பார்த்தால் வெட்கக் கேடாகிவிடும். யார் என்ன சொன்னாலும் சரி. காலையில் எழுந்தவுடன் தலைநகருக்கு பறந்துவிட வேண்டும் என திட்டம் தீட்டிக் கொண்டேன்.
கண்ணயர்வதற்குள் கதவு திறக்கப்படும் ஓசைக் கேட்டது. நான் தூங்கியதை போல் பாசாங்கு செய்தேன். நந்தினி உள்ளே நுழைந்தாள். என் இதயம் வெடித்துவிடும் போல் இருந்தது. அவள் என் அருகினில் வந்தாள். பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்துக் கொண்டு கதவை நோக்கி சென்றாள்.
கதவருகே நின்று என்னை கூர்ந்து நோக்கினாள். சோகத்தின் சாயலை அவள் முகத்தை நானும் பார்க்க தவறவில்லை.
***
"என்னப்பா காலையிலேயே எங்க கிளம்பிக்கிட்டு இருக்க?" மாமா என்னைக் கேட்டார். 'அட 'ச்சே' இந்த பெருசோட தொல்லை தாங்கலையே மனதில் கருவிக் கொண்டேன்.
"நான் இன்னிக்கு 'கே.எல்'க்கு போகனும் மாமா"
"ஏம்பா, அதுக்குள்ள என்ன அவசரம்?" அவர் குரலில் கலவரம் இருந்தது.
எச்சிலை விழுங்கி வார்த்தைகளை அடுக்கி பதில் சொல்ல ஆயத்தமானேன்.
"நான் விடுப்பு ஏதும் எடுக்கல… விடுப்பு எடுக்கும் எண்ணத்தோடும் இங்க வரல", மாமாவின் முகத்தில் சோகம் கவ்வி இருந்தது. என் கருத்தை ஆமோதிக்கும் வண்ணமாக தலையசைத்தார்.
"ம்ம்ம்… யாரும் எதிர்பார்க்கவில்லை தான்.." நான் மௌனம் காத்தேன்.
"நந்தினிகிட்ட சொல்லியாச்சாப்பா?"
"இன்னும் சொல்லலை".
"ம்ம்ம்… கிளம்ப சொல்லுப்பா, பிறகு 'லேட்' பண்ணிட போறா".
நந்தினியும் என்னுடன் வந்தாகதான் வேண்டுமா.மனதுள் நொந்துக் கொண்டேன். அழைத்துச் செல்லாவிட்டால்…
"நந்தினி ஒரு வாரம் விடுப்பில் இருக்கா. 'கே.எல்' பக்கம் கூட்டிகிட்டு போனாக்க அவளுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்".
'ம்' கொட்டி தலையசைத்தேன். என் மனமே ஆறுதலைத் தேடித்தானே அலைகிறது. நான் எப்படி அடுத்தவருக்கு ஆறுதல் கொடுப்பது.
நான் என் காலை பசியாறலை முடித்துக் கொண்டு மூட்டை முடுச்சுகளைக் கட்டினேன். நந்தினி கதவருகே வந்து நின்றாள். எனக்கு என்னவோ போல் இருந்தது. நேற்றுதான் அவளுக்கு தாலி கட்டினேன். இன்றே ஒன்றும் சொல்லாமல் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என யோசித்தேன். மனதை திடப்படுத்திக் கொண்டு கேட்டேன்.
"நீயும் என் கூட வரப் போறீயா"
"உங்களுக்கு சம்மதமா?" நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னுடன் அவள்பேசிய முதல் வார்த்தை அது.
"வரதுனா வா…" வேண்டா வெறுப்பாக பதில் சொன்னேன். அவள் வரக் கூடாது என்ற எண்ணத்தில் தான் சொன்னேன்.
இருந்தாலும் அவள் என்னுடன் வந்தாள். வீட்டில் அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பினேன். மாமாவின் முகத்தைப் பார்க்கும் போது நடந்தது நடந்து விட்டது என என்னை நானே சாமாதானப்படுத்திக் கொள்ள முயன்றேன். ஆனால் நந்தினியை பார்க்கும் போதெல்லாம் நளினாவின் ஞாபகம் என்னை வாட்டியது. கோபம் வந்தது. மனம் நிம்மதியை இழந்தது
தொடரும்...
23 Comments:
'சிகரெட்டின்' புகை இருதயத்தின் காயங்களை மேலும் காயமாக்கி வெளியேறிக் கொண்டிருந்தது. மனம் வலித்தது.//
பர்னால் அல்லது ஆண்டி செப்டிக் ஆயிண்மெண்ட் ஏதும் போடவும்!
//உடைந்த மனதோடு அவரை சமாதானப் படுத்தினேன்.//
பெவிக்குவிக் எதையும் எதனோடும் ஒட்டும்!!!
//சரிப்பா போய் படுத்துக்க, ரொம்ப நேரம் பனியில நின்னா உடம்புக்கு ஆகாம போயிடும்".//
ரொம்ப நேரம் தொடரை படிச்சா கண்ணுக்கும் ஆகாதாமே!!!
//முதலிரவு அறையில் விளக்குப் போட்டு வெளிச்சமாக இருந்தது. என் மனம் 'திக் திக்' என அடித்துக் கொண்டது.//
ஸ்டார்டிங் டிரபிளா?
//நந்தினி என்ன செய்துக் கொண்டிருப்பாள்? //
ம்ம்ம் பல்லாங்குழி விளையாடிட்டு இருப்பாங்க!!! என்ன கதை ஆசிரியரே என் வாயில் இருந்து ஏடா கூடமாக வர வெச்சுடுவீங்க போல!!!
//பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்துக் கொண்டு கதவை நோக்கி சென்றாள்.//
இதுக்கு தமிழ்பட முதலிரவு காட்சியே மேல், ஆசை ஆசையாக படிச்சேன்:(((
//"நான் இன்னிக்கு 'கே.எல்'க்கு போகனும் மாமா"//
நான் கூட கே.எஸ் வாங்க போகனும் என்று மாற்றி படிச்சுட்டேன்:)))
//குசும்பன் said...
//பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்துக் கொண்டு கதவை நோக்கி சென்றாள்.//
இதுக்கு தமிழ்பட முதலிரவு காட்சியே மேல், ஆசை ஆசையாக படிச்சேன்:(((
//
நண்பா இது நொம்ப ஓவரூ!
//நான் என் காலை பசியாறலை முடித்துக் கொண்டு மூட்டை முடுச்சுகளைக் கட்டினேன்.//
என்ன பிரச்சினை இருந்தாலு கரெக்ட்டா கொட்டிக்க முடியுது? + பார்சல் வேறயா?
@குசும்பன்
அடுத்த பதிவுல பாருங்க உங்களுக்காக பல பல ஆய்வுகள் செய்து கதையில் உங்கள் எதிர்ப்பார்ப்புகளை தீர்த்து வைக்கிறேன்.
//நளினாவின் ஞாபகம் என்னை வாட்டியது. //
பட்டர் தடவி வாட்ட சொல்லவும்!!!
ஹா ஹா ஹா, குசும்பன் அண்ணன் பேக் டு பாரம். கலக்கல் கமெண்ட்ஸ்:):):)
@குசும்பன்
1)ஆங் போடுறாங்க..
2) அங் ஒட்டும்
3) அங் ஆகாது
4) அப்படினா?
5) என்ன வர வைக்கிறாங்க?
6) என்ன படம்னு சொன்னா நானும் பார்ப்பேன்.
7) அதுவும் புரியல.
8) சாப்பாடு முக்கியம் அமைச்சரே
@ஆயில்யன்
நீங்க என்ன ஆதரிக்கிறிங்கலா இல்ல ஏசுறிங்களா?
உள்ளேன் அய்யா. . .
வேறு பின்னூட்டம் போடலாம்னு பார்த்தேன், குசும்பன் கலாய்ச்சிருவாறோன்னு பயமா இருக்கு....
:-))))
intha smiley kusumbarooda comments-kku...
katha nalla poguthu...
இல்ல மாமா… நாமெல்லாம் ஒரு குடும்பம் தானே… உங்களுக்கு உதவி செஞ்சதில நான் சந்தோஷப் படுறேன்".
:(
ஏற்கனவே சொன்னது,
கதையை ஒரு காட்சியமைப்பை போல் விவரிக்க நினைக்கிறீர்கள்.
முதல் காட்சியில் சிகரெட் குடித்து கொண்டிருந்தது, திரைக்கதைக்கு உரிய நடை.
எழுத்தில் முதிர்ச்சி தெரிகிறது,
"வரதுனா வா…"
இந்த வார்த்தையே பாரியின் மனநிலையை சொல்லி விட்டது,
இதைப்போல் குறிப்பால் மனநிலையை உணர்த்துவது அல்லது உணர்த்த முயற்சிப்பது இதை சிறந்த படைப்பாக்கி தரும்
விக்கி,இன்றுதான் பகுதி 5 ம்,6 ம் வாசித்தேன். காதலோடு கலந்த சோகமும்...குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றும் நல்ல எண்ணமும் கொண்ட பாரியின் அவஸ்தை... கதை அழகாக நகர்கிறது. தொடருங்கள்.
குசும்பம் சும்மா உங்களை உசுப்பேத்துறார்.கண்டுக்காம தொடருங்க விக்கி.
waiting for the end..
waiting for the end.. write it soon..
:))
~~உடைந்த மனதோடு அவரை சமாதானப் படுத்தினேன்.~~
yenna oru manasu paariku... gandhi parambaraiyin kadaisi vaariso..
Post a Comment