Tuesday, September 9, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (4)

அத்தியாயம் 4

மேள தாளங்களோடு திருமண மண்டபம் களைக் கட்டிக் கொண்டிருந்தது. இங்கே ஏதோ ஒரு அறையில் தான் நந்தினியை அலங்காரம் செய்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். விடியற்காலையில் இருந்து இங்கே தான் இருக்கிறேன். கல்யாண வேலைகள் செய்து மாளவில்லை. நான் சோர்ந்து போனேன்.



“ரொம்ப களைப்பா இருந்தா கொஞ்ச நேரம் ஓவ்வெடுத்துக்கப்பா”, மாமா சொன்னார்.



வழக்கம் போல் என் பாணியில் சிரிப்பை மட்டும் பதிலாய் வைத்தேன். தாகத்தை தனிக்க புட்டி நீரை வாயில் கொட்டிக் கொண்டேன். விருந்தினர்களின் வருகை அதிகரித்த வண்ணமாய் இருந்தது. சிறு பிள்ளைகள் அங்கும் இங்குமாய் ஓடி ஆடிக் கொண்டிருந்தார்கள். ஆரவாரம் அதிமானது.



மண்டபத்தில் ஓய்வெடுக்கும் அறை ஒன்று இருந்தது. அதை நோக்கி நடந்தேன்.

“மாமா எங்க இவ்வளோ வேகமா?” சாந்தி சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்துக் கேட்டாள். சாந்தி நந்தினியின் தங்கை.



“கொஞ்சம் ‘ரெஸ்ட்’ பண்ணலானு…”



“பொய் சொல்லாதிங்க, ரொம்ப பேர் வந்தோன ‘எஸ்கேப்பா’ “.



நான் சிரித்துவிட்டு அங்கிருந்து விறுவிறுவென நடந்தேன். ஓய்வறையில் மெத்தை நாற்காளிகள் இருந்தன. அதில் சாய்ந்துக் கொண்டேன். எவ்வளவு இதமாக இருக்கிறது. நோகும் உடம்பை பிடித்துவிடுவது போல் இருந்தது அந்த பஞ்சு நாற்காலி.



அதிகாலையிலேயே அம்மா என்னை எழுப்பிவிட்டிருந்தார். தூக்க வெறி என்னைக் கடுப்பேத்தியது. என்ன செய்வது வாழ்க்கையில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு. மனதை தேற்றிக் கொண்டு கல்யாண வேலைகளில் ஈடுபடலானேன்.



விடிந்தவுடன் அறிமுகம் குறைவான சொந்த பந்தங்கள் வீட்டில் நிறைய ஆரம்பித்தார்கள். சிலர் என்னைப் பார்த்து ஏதோ குசுகுசுத்தார்கள். எனக்கு என்னவோ போல் இருந்தது. பாவம் என் மாமன். அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தார். சலிப்போ, களைப்போ எந்த அறிகுறியும் அவர் முகத்தில் பிரதிபலிக்கவில்லை. பெண்ணை பெற்று வளர்த்து திருமணம் செய்விப்பது ஒரு தந்தைக்கு எவ்வளவு அளப்பரிய கடமையாக அமைகிறது.



நான் என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். திருமணத்திற்கு இன்னும் நேரம் இருந்தது. இரண்டு மூன்று முறை கோட்டவாய் வந்து மூளைக்கு ஓய்வு வேண்டுமென கெஞ்சியது. எனக்கு கண்கள் சொக்கியது. மண்டபத்தின் ஆட்களின் சத்தம் போக போக தூரமாகிக் கொண்டிருந்தது.

*****
“பாரி.., ஏய் பாரி… எழுந்திரிய்யா…” யாரோ என் தோளைப் பிடித்து உலுக்கினார்கள். எனக்கு தூக்கிவாரி போட்டது. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன்.



அம்மா நின்றிருந்தார். அவரை தான் முதலில் பார்த்தேன். அவர்தான் எழுப்பிவிட்டிருக்க வேண்டும். ‘என்னடா இது கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க முடியலையே என நொந்தேன். மீண்டும் ஒரு கோட்டவாய் வந்து தூக்கம் போதவில்லை என்றது. அம்மாவின் பக்கத்தில் மாமாவும் அத்தையும் நின்றிருந்தார்கள்.



“என்ன மா, வாங்க மாமா” நான் என் கண்களைத் துடைத்துக் கொண்டு சுதாரித்து அமர்ந்தேன். அம்மா. மாமா, அத்தை என முவரும் என் முன் நின்றிருந்தார்கள். என் கடிகாரத்தை பார்த்தேன். படுத்து ஐந்து நிமிடம் தான் ஆகியிருக்கும் என நினைத்திருந்தேன். அக்கணக்கு தவறாக போனதை உணர்ந்தேன்.



மாமாவின் முகம் பேயடித்த்தை போல் வெளிறிப் போய் இருந்தது. அத்தையோ முகத்தருகே கைக்குட்டையை வைத்துக் கொண்டு கண்ணீர்வடித்துக் கொண்டிருந்தார்.


“சாரி மாமா, அசதியில் தூங்கிட்டேன், ரெண்டு நிமிசத்தில் ‘ரெடியாகிடுறேன் இருங்க” அவர் முகம் சுருங்கியது. அதில் போபமும், வருத்தமும் கலந்திருந்த்தை உணர்ந்தேன். அம்மாவை பார்த்தேன். உடனே அம்மா என் கையை பிடித்து ஒரு ஓரமாக இழுத்துச் சென்றார்.


“என்னாச்சிமா, எல்லோரும் ஏன் ஒரு மாதிரி இருகிங்க?”


“மாப்பிள்ளை வீட்டில் இருந்து யாரையும் காணும்டா,” மறுபடியும் என் கைக்கடிகாரத்தை சரி பார்த்தேன். முகூர்த்த நேரம் தாண்டிக் கொண்டிருந்தது.


“ஏன் இன்னும் வரல, ஏதாவது ‘டிராப்பிக் ஜேமில்’ மாட்டிக்கிட்டாங்களோ?” அம்மா பெருமுச் செரிந்தார்


மாமா என் அருகினில் வந்தார் “தெரியலப்பா, நானும் இப்ப வரைக்கும் ‘போன்’ பண்ணிக்கிட்டு தான் இருக்கேன், பதில் கிடைக்கல, நந்தினியும் ரொம்ப தடவ ‘போன்’ போட்டு பார்த்துட்டா.”


நான் குழப்பிப் போனேன். நான் அந்த மாப்பிள்ளை பையனை பார்த்தது கூட இல்லை. பார்த்திருந்தாலாவது அவனை தேடிப் பிடித்து, என் குடும்பத்தை கஷ்டப்படுத்தியதற்காக தலையில் இரண்டு தட்டு தட்டி அழைத்து வந்திருப்பேன். இப்போதைக்கு வெயிலில் அகப்பட்ட புழுவாய் நோகும் மாமனை பார்த்தபடி மட்டுமே என்னால் இருக்க முடிந்தது. எனக்கு வேதனையயக இருந்தது.


மண்டபத்தில் ஆட்கள் நிறைந்துவிட்டிருந்தார்கள். அவர்களினும் சிலர் பிரச்சனனயை அறிந்துவிட்டிருக்க வேண்டும். ஒரு வித குழப்பப் பேச்சு அவர்களினும் ஏற்பட்டிருந்ததை உணர முடிந்தது.


நான் மெல்ல கல்யாண மேடையை எட்டிப் பார்த்தேன். ஐயர் அங்க வேர்த்து போய் அமர்ந்திருந்தார். மாமா என்னை நந்தினி இருக்கும் அறைக்கு அழத்துச் சென்றார். அம்மாவும் அத்தையும் கூடவே வந்தார்கள். அந்த அறைக்குள் நுழைய எனக்கு என்னவோ போல் இருந்தது. நான் நந்தினியை நினைத்துப் பார்த்தேன். அவள் மனநிலை எப்படி இருக்கும். கவலை, வெட்கம், அவமானம் என அனைத்து கொடுமைகளையும் தாங்கிக் கொண்டிருப்பாள் அல்லவா. இந்நிலையில் நான் அவளை பார்க்கதான் வேண்டுமா?


நான் அங்கிருந்து நகர எண்ணினேன். முக்கியமாக பசி என் வயிற்றைக் கிள்ளியது. அதற்கு ஏதாவது வழி செய்யுமாறு மூளை வற்புறுத்தியது. நான் நகர்வதற்குள் மாமா என்னை அவ்வறைக்குள் இழுத்தார்.


“சொல்லுங்க மாமா.”


“நாந்தான்பா தப்பு பன்னிட்டேன்.” உணர்ச்சியை கட்டுப்பத்தி நா தழு தழுக்க கூறினார்.


“ஏன் மாமா, நீங்க என்ன தப்பு செஞ்சிங்க?”


“தெரிஞ்ச பையனா இருக்கானு நான் தான் நந்தினிய அந்தப் பையனுக்கு நிச்சயம் செஞ்சி வச்சேன், அவன் இப்படி பண்ணுவானு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல,” எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கதவருகே நின்றிருந்த அம்மாவைப் பார்த்தேன்.


“பாரி நீதான்யா மாமாவுக்கு உதவனும்”.


என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாய் செய்வேன். ஆனால் இப்போது என்ன செய்ய முடியும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம். இப்போது நான் பினாங்கு போய் அவனை தேடிக் கொண்டும் வர முடியாது. என்னையும் அம்மாவையும் தனியாய் விட்டு மாமா சற்று தள்ளி நின்றார்.


“உன் மாமா பாவமய்யா, ரொம்பவும் அவமான பட்டுபோய் இருக்காரு. யாரும் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல. ஆளாளுக்கு ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க,” அம்மாவின் குறலில் கலவரம் இருந்தது.


“பாரி.. உன்னாலதான்பா எல்லாத்தையும் சரி பன்ன முடியும், மாமா அவமானப்பட்டு நிக்குறத என்னால பார்க்க முடியாதுப்பா,” அம்மாவின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.


“அம்மா,” அவர் அழுவதை பார்க்க என்னால் தாங்க முடியவில்லை.


“அம்மா உன்னை நம்புறேன்பா, மாமாவுக்கு இந்த உதவியை நீதான் செய்ய முடியும், அந்த மாப்பிள்ளைக்கு பதில நீதான்யா மணமேடையில் உட்காரனும்”.


“ஹா…” ஒரு கனம் என் தலைச் சுற்றியது. உலகம் இருண்டு போனதாய் உணர்ந்தேன்.



தொடரும்...

12 Comments:

ஜெகதீசன் said...

அய்யோ பாவமே...
:((

வால்பையன் said...

போன தொடரில் குறிபிட்டுள்ள படி
பாரிக்கு சரியான அதிர்ச்சி கொடுத்துள்ளீர்கள்.
ஆனால் சினிமா மற்றும் திரைப்படங்களில் இம்மாதிரியான திருப்புமுனைகள் சகஜம் தானே, இனிமேல் நீங்கள் வைக்கும் திருப்புமுனைகள் தான் மற்றவர்களிடமிருந்து உங்களை தனியாக காட்டும்.
மேலும் பல அதிர்ச்சிகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.

வால்பையன் said...

லேபிளில் நீங்கள் குறிபிட்டுள்ள இளமை மட்டும் கண்ணுக்கு தெரியவே மாட்டிங்குது.
ஏதாவது டூயட் சாங் வையுங்க

Anonymous said...

எப்போதும் நடக்கும் (நாம் சினிமாவில் பார்க்கும்) சம்பவம் தான் என்றாலும்...கதையை நகர்த்தும் விதம் அருமை..
//அந்த அறைக்குள் நுழைய எனக்கு என்னவோ போல் இருந்தது. நான் நந்தினியை நினைத்துப் பார்த்தேன். அவள் மனநிலை எப்படி இருக்கும். கவலை, வெட்கம், அவமானம் என அனைத்து கொடுமைகளையும் தாங்கிக் கொண்டிருப்பாள் அல்லவா. இந்நிலையில் நான் அவளை பார்க்கதான் வேண்டுமா?//

உணர்வுகளின் வெளிபாடு நன்று!

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் விக்னேஸ்...

தொடருங்கோ...

விஜய் ஆனந்த் said...

:-))))....

கதை நல்லா போகுது...

பழக்கமான திருப்பம்தான்னாலும், சொன்ன விதம் நல்லா இருக்கு...

வாலார் சொன்ன மாதிரி, பல அதிர்ச்சித்திருப்புமுனைகளை போட்டுத்தாக்கவும்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஜெகதீசன்

:). வருகைக்கு நன்றி.

@வால்பையன்

எனக்கு பயனுள்ள கருத்துகளை கொடுப்பதற்கு நன்றி வால்.
ஓகே பாட்டு போட்டிலாம்.

@மலர்விழி

நன்றி. மீண்டும் வருக...

@விஜய் ஆனந்த்

நன்றிங்க...

ஹேமா said...

அடுத்து .....என்னாகும் விக்கி.

Anonymous said...

விக்கி, பாரி உங்களுக்கு என்ன கொடுமை செய்தார்?..ஏன் அவரை இப்படி மாட்டிவிட்டிங்க?...நளினா?...

Anonymous said...

பாரி சிறிது நாளில் வெளிச்சத்துக்கு வந்திடுவார்(நந்தினியின் வருகையில்)ஆனால்...நளினாவுக்குத்தான் இருட்டு...:(

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஹேமா

வருகைக்கு நன்றி ஹேமா. நாளை பதிவிடுகிறேன் அடுத்த விடயத்தை.

@உஷா

நல்ல கற்பனை உங்களுக்கு.

VG said...

todar arumaiyaga irukku... tiruppangal piditirukkindrathu...

VG said...

katai ippothaan soodu pidikirathu pole... :D