"பதினைந்து வெள்ளிங்க"
"விலை அதிகமா இருக்கே?"
"விலைவாசி ஏறி போச்சிங்க. கட்டுப்படி ஆக மாட்டுது."
பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தார் முத்து.
"யோவ் கிழவா நில்லு" முத்துவின் பின்னால் இருந்து ஒரு குரல்.
அவர் திரும்பிப் பார்த்தார்.
"பிள்ளைய பெத்து ஊர் மேய விட்டு வச்சிருக்க. என்ன ஏதுனு பார்த்துக்க மாட்டியா?"
அவருக்கு எதும் சரியாக புரியவில்லை. அந்த இளைஞனைப் பார்த்து திரு திருவென விழித்தார்.
"நான் பேசிகிட்டு இருக்கேன். தெனவெட்டா நிற்குற".
அவன் விட்ட முதல் குத்து மூக்கில் பட்டு நரக வேதனையைக் கொடுத்தது. இரண்டாம் அடி தவிர்க்க முடியாமல் மார்பில் பதிந்தது. முத்து நிலை தடுமாறி சாலை ஓராமக இருந்த புதரில் விழுந்தார்.
அவர் பேச அசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் அந்த இளைஞன் சொன்னான்.
"யோவ் பெருசு. உன் பையன்கிட்ட சொல்லி வையி, இன்னொரு தடவ என் தங்கச்சி பின்னாடி சுத்துரானு கேள்விபட்டேன் வீடு புகுந்து உதைப்பேன்".
"தம்பி எதுவா இருந்தாலும் வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம். இப்படி நடு ரோட்டில்..".
"மூடுயா… வந்துட்டான்".
நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி மறைந்து போனான் அந்த இளைஞன்.
முத்துவின் மூக்கிலிருந்து லேசாக இரத்தம் கசிந்தது. கல்லில் மோதி உடைந்த மூக்குக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டார். சிதறிய பொருட்களை மீண்டும் பையில் சேகரித்துக் கொண்டு கிளம்பினார்.
****
"என்னப்பா ஆச்சு? ரத்தமா இருக்கே?" என அபிநயா கேட்டாள்.
"இல்லைமா, வர வழியில் நாய் துரத்தி அப்பா கீழே விழுந்துட்டேன்"
இரத்தக் கசிவை துடைத்துக் கொண்டார். மனக் கண்ணீரை யார் துடைக்க முடியும். இடிந்து போய் அமர்ந்திருந்தார்.
அன்று மாலை
சந்துரு வேலை முடிந்து வீடு திரும்பினான். முத்து அவனை முறைத்துப் பார்த்தார். அவரின் கோபம் உச்ச நிலையை அடைந்தது. சந்துருவும் ஒருவாராக புரிந்துக் கொண்டான்.
"யார்டா அது?"
"லலிதாப்பா. எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருக்கு. அவளதான் கட்டிப்பேன்".
"நல்ல குடும்பமா தெரியல. சரி வராது".
"நான் வாக்கு குடுத்துட்டேன்".
"என்னால ஏத்துக்க முடியாது".
இரண்டு நாட்களுக்கு பிறகு
நேற்றிரவிலிருந்து சந்துருவை காணவில்லை. அவனோடு லலிதாவும் காணாமல் போய்விட்டாள். லலிதாவின் வீட்டிலிருந்து ஆட்கள் வந்திருந்தார்கள். வீட்டின் முன் நின்று கண்டபடி பேசி வம்பிழுத்தார்கள்.
"என் புள்ள செத்துட்டான், அவனை தேடி இந்தப்பக்கம் வராதிங்க". முத்து ஆத்திரத்தோடுச் சொன்னார்.
மீண்டும் பல ஏச்சு பேச்சுகளுக்குப் பிறகு அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.
காலங்கள் கடந்துவிட்டது. மௌனமாக வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருந்தது.
பெரியவர்கள் சொல்வார்கள், பிள்ளைகள் பெற்றவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை கடமை, பெற்றோர்கள் பிள்ளைகள் மீது வைக்கும் நம்பிக்கை எதிர்பார்ப்பு என்று. பெற்றோர்கள் கடமைத் தவறுவது குறைவு. பிள்ளைகளிடம் இருக்கும் எதிர்பார்ப்புகள் பல ஏமாற்றங்களாகவே அமைகிறது என்பது வேதனையான உண்மை.
"அப்பா நான் வேலைக்குப் போயிட்டு வரேன்". அபிநயா தன் கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வாசலை நோக்கிச் செல்கிறாள்.
"சரிமா பார்த்து போயிட்டு வா".
முத்து அபிநயாவின் எதிர்காலத்தை நினைத்து தன் எண்ணச் சிறகை பறக்கவிடுகிறார். அவளின் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதில் மட்டுமே அவரது சிந்தனை மூழ்கிக் கிடக்கிறது.
அன்றய தினம் வேலை முடிந்தவுடன் அபிநயா தன் காதலனைச் சந்திக்கச் செல்கிறாள். இனி அவள் வாழ்க்கை அவள் முடிவினில்.
15 Comments:
வித்தியாசம்! :)
:-)))..
:)))
எதுக்கு கமெண்ட் பக்கம் பாப்-அப் விண்டோவில்?
பிள்ளைகள் காதலில் விழும் வரைதான் அவர்கள் வாழ்கையை நாம தீர்மாணிக்க முடியும் - படம் ஜீன்ஸ், எஸ்வீசேகருக்கு அந்த வசனத்தைக் கொடுத்து நாசரிடம் பேசச் சொல்லுவார்கள் !
:)
கதையை ஏன் இவ்ளோ வேகமா சொல்லி முடிக்கிறீங்க ? என்ன அவசரம். நிதானமா, விரிவா, எழுதுங்க. :) இல்லேன்னா சொல்லவரும் கருத்தின் கனம் அடிபட்டுப் போகும்.
கதையை ஏன் இவ்ளோ வேகமா சொல்லி முடிக்கிறீங்க ? என்ன அவசரம். நிதானமா, விரிவா, எழுதுங்க. :) இல்லேன்னா சொல்லவரும் கருத்தின் கனம் அடிபட்டுப் போகும்.
@தமிழ் பிரியன்
நன்றிங்கோ அண்ணா
@விஜய் ஆனந்த்
ஆஹா ஆழமாக கருத்து. நன்றி.
@ஜெகதீசன்
மிக மிக ஆழத்தினும் ஆழமான கருத்து. மிக்க நன்றி.
@கோவி.கண்ணன்
நன்றி கோவி அண்ணே, சரியா சொன்னிங்க.. எஸ்.வீ.சேகர் ஆரம்பம் முதல் பைத்தியம் மாறி பேசினாலும் கடைசியில் இந்த வசனத்தை தான் சரியா பேசி இருப்பதா தோனுது.
@சேவியர்
அண்ணே சரியான அறிவுரை. எனக்கும் அப்படிதான் தோணுது. இழுவையா இருந்திட கூடாதுனுதான் சட்டுனு முடிச்சிட்டேன்.
உணர்வுகளின் வலி குறித்த கதைக்கு இத்தனை வேகம் தேவையில்லை விக்கி..
கதையும் கருத்தும் அருமை
//Xavier said...
கதையை ஏன் இவ்ளோ வேகமா சொல்லி முடிக்கிறீங்க ? என்ன அவசரம். நிதானமா, விரிவா, எழுதுங்க. :) இல்லேன்னா சொல்லவரும் கருத்தின் கனம் அடிபட்டுப் போகும்.//
வழிமொழிகிறேன்..!
@அதிஷா
கருத்திற்கு நன்றி அதிஷா. திருத்திக் கொள்கிறேன்.
@நிஜமா நல்லவன்.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிஜமா நல்லவன். இப்படிக்கு நிஜமாx2 நல்லவன்.
// பெரியவர்கள் சொல்வார்கள், பிள்ளைகள் பெற்றவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை கடமை, பெற்றோர்கள் பிள்ளைகள் மீது வைக்கும் நம்பிக்கை எதிர்பார்ப்பு என்று. பெற்றோர்கள் கடமைத் தவறுவது குறைவு. பிள்ளைகளிடம் இருக்கும் எதிர்பார்ப்புகள் பல ஏமாற்றங்களாகவே அமைகிறது என்பது வேதனையான உண்மை.//
உண்மை.
கொஞ்சம் நிதானமாக எழுதுங்கள். சம்பவங்களில் கொஞ்சம் அழுத்தம் தேவை. அப்பொழு்துதான் சொல்ல வரும் கருத்து நிற்கும்.
சீரியஸ்: கதை சுருக்கமாக, தெளிவாக, சொல்ல வந்த கருத்தைச் சினிமாத்தனம் இல்லாம, ஜவ்வு மாதிரி ஒட்டாம, எளிமையான முறையில்... நல்லாவே எழுதி இருக்கிங்க
டேம்ப்ளட்டின் முகப்பு படம் (நீரின் மேல் உதிர்ந்த இலை), அழகா இருக்கு
மொக்கை:
1.உண்மையச் சொல்லுங்க, அந்தக் கிழவரோட பொண்ணு உங்கலத்தானே பார்க்க வருது???
2. கிழவர் ரொம்ப மோசமானவர் போலிருக்கே??? பின்ன... கெட்ட கெட்ட கனவெல்லாம் காணுறாருல்ல
ரொம்ப சீக்கிரமா கதையெ முடிச்சிட்டிங்க...என்ன அவசரம்? சொல்ல வந்த கருத்து பேஷ், பேஷ்...நல்லா இருக்கு...தொடருங்க...
@வடகரை வேலன், ஆனந்தன், மலர்விழி
மிக்க நன்றி.
Post a Comment